ஏதேனும் வேண்டுமா என்பதை கவனித்துச் சென்றாள்.ரிசெப்ஷனில் தொடங்கிய விருந்தினர்கள் கூட்டம் திருமணத்திலும் குறைந்தபாடாய் இல்லை.காலை முதலே தன் மகளை கவனிப்பதும் ரினிஷாவிற்கு வேண்டியதை செய்வதுமாய் பம்பரம் போல் சுற்றிக் கொண்டிருந்தாள் ஜீவிகா.
அதைவிடவும் ரேஷ்வா தன் தங்கை ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் ஜீவிகாதான் செய்ய வேண்டும் என திட்ட வட்டமாக கூறிவிட அதற்கும் அசராதவளாய்,
“ஏன் ரேஷ் பையனோட தங்கச்சினா தங்கத்துல ஒட்டியாணம் எல்லாம் போட மாட்டாங்களா..ஏன் ரினி உங்க ஊர்லயும் அந்த பழக்கமெல்லாம் இல்லையா..சோ சேட்..ஒண்ணும் தேறாது போலேயே..”
“ஏன் மேடம் இந்த தங்கத்துல செயின் எல்லாம் போட்டா ஏத்துக்க மாட்டீங்களோ..நடிச்சா ஹீரோயின் தான் இல்ல?”
“அப்கோர்ஸ் ரினி செல்லம்..உன் நொண்ணனை..ஐயோ சாரி சாரி நம்ம சேட்டனை வழிக்கு கொண்டு வந்ததுக்காகவே நீயெல்லாம் நான் என்ன கேட்டாலும் தரணும் தெரிஞ்சுக்கோ..”
“ஆனாலும் உங்க பாசம் என்னால முடில ஜி குட்டி..கண்ணு வேர்க்குது..”
“அட ஆமா ரினி செல்லம்..பாக்குற அப்போ எல்லாம் சாப்டியா டா..எதாவது வேணுமா..மச்சான் சாப்டாறானு..ப்பாபா..வாய்ப்பே இல்ல..”
எனும்போதே ரினிஷாவை மேடைக்கு அழைத்துச் செல்ல வந்தனர்.அரக்கு நிற முழு சரிகைப் பட்டில் தலை நிறைய பந்து போல் சுற்றிய ல்லியும் கழுத்து நிறைத்த நகைகளுமாய் கேரழள மணப்பெண்ணாய் மேடையேறியவளிடமிருந்து விழியகற்றாமல் அமர்ந்திருந்தான் ரேஷ்வா.
அருகில் வந்த நேரம் அவளைப் பார்த்து ஹாய் என்பதாய் கையசைக்க அவளும் கண்சிமிட்டி சத்தமின்றி ஹாய் என்று வாயசைத்தாள்.மாலை மாற்றி தாலி கட்டிய நேரம் அவளது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தான் ரேஷ்வா.
“யோவ் ஹீரோ இத்தனை பேர் நிக்குறோம்னு கொஞ்சமாவது கூச்சம் இருக்கா..”
“என் பொண்டாட்டிக்கு தான ஜி கிஸ் கொடுக்குறேன் இதுக்கு எதுக்கு வெட்கம்..”
“ம்ம் ம்ம் வேணாம் டைமிங்கா ஒண்ணு சொல்ல தோணுது ரினி என்னை பிச்சுருவா அதனால மைண்ட் வாய்ஸ்லயே வைச்சுக்குறேன்..”,என்றவளைப் பார்த்து இருவருமே முறைத்தனர்.
அடுத்த முகூர்த்தத்திற்கு மணமக்கள் தயாராகச் செல்ல ஜீவிகா ஜெயந்திடம்,”மாம்ஸ் நாமளும் இப்படி எதாவது ஒரு முறைப்படி மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“அட ஏன் ஜீவிக்குட்டி தெரியாம ஒரு தடவை தப்பு பண்ணலாம்..தெரிஞ்சே இன்னொரு தடவை பண்ண சொல்றியே..”
“மச்சான் ஆனாலும் நீங்க கெத்துதான் போங்க..எவ்ளோ தைரியமா உண்மையை பேசுறீங்க..”