(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

வேண்டினதில்ல.ஆனா இப்போ எல்லாம் என்னோட ஒரே பிராத்தனை இந்த நட்பு என்னோட கடைசிகாலம் வரை கூடவே இருக்கணும்னு மட்டும் தான்.

ஆத்வியை விட நான் நன்றி சொல்ல வேண்டிய ஒரு ஆள் நீங்க தான் மச்சான்..எங்க ஜியை எந்த வித மாற்றமும் இல்லாம அப்படியே வாழ வைக்குறதுக்கு..யூ ஆர் ட்ரூலி அ ப்ளசிங் பார் அஸ்..”

அப்படியே ஒரு கட்டிலை எடுத்துட்டு வாங்கப்பா நான் இங்கேயே கொஞ்ச நேரம் படுத்து தூங்குறேன்..எல்லாரும் சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வந்துட்டு எழுப்புங்க”,என்றவாறு ஜீவிகா அங்கிருந்த சேரில் சென்று அமர மொத்தமாய் சிரித்திருந்தனர்.

எவ்ளோ பீல் பண்ணி ஒருத்தன் பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருக்கேன் கொஞ்மாவது மதிக்குறியா நீ?'

அதையே தான் நானும் சொல்றேன்..இவ்ளோ பீலீங் எல்லாம் வேலைக்காகாது தம்பி..உன் விதி இந்த ஜென்மத்துல எங்ககூட இருந்து தான் ஆகணும் வேற வழியே கிடையாது செல்லம்.

ஆங் போ போ மீட்டிங் முடிஞ்சுது போய் புள்ளை குட்டியை படிக்க வைக்குற வழியைப் பாரு போ போ..”என்றவாறு வடிவேலு பாணியில் பேசிக் கொண்டிருந்தவளை அனைவருமாய் சேர்ந்து மொத்தி எடுத்தனர்.

வேணாம் வலிக்குது..அழுதுருவேன்..”

ஜி முடில டீ உன் மொக்கையை மட்டும் நிறுத்திறேன் ப்ளீஸ்..”

சரி சரி பொழச்சு போங்க..பைனல் டச் யாராது கொடுத்து ஒரு எண்ட்கார்ட் போடுங்கப்பா..ரொம் லென்தா போகுது..”

நான் ஒண்ணு சொல்லவா..”

கலெக்டர் அம்மா நீயுமா..சரி சின்ன பிள்ளை ஆசைப்பட்டுட்ட..சொல்லு கேட்போம்..”

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் எல்லாம்

என் வாழ்வின் பொக்கிஷம்

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் எல்லாம்

என் பிறவிக்கான வரம்

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் எல்லாம்

என் மரணத்திலும் மரிக்காத பசுமை நினைவுகள்

நட்பெனும் வரமாய் என்னோடு  நீயிருக்க

இப்பிறவி ஒன்று போதும் மறுபிறப்பென்று

ஒன்றிருந்தால் நாங்கள் உன் மகவாகும் வரம் வேண்டும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.