(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

டேய் ஆத்வி எத்தனை நாள் ஆசை டா..இப்படி பங்கமா மாட்டி விடுற..அடியெல்லாம் வாங்குறதுக்குத் தெம்பில்ல டா..”

டூ லேட்..பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும் மாம்ஸ்..பாத்துக்குறேன்..”

மீண்டும் மணமக்கள் மேடையேற தெலுங்கு முறைப்படியான திருமணம்..அழகிய வெண்நிறப்பட்டில் கையில் இளநீர் வெற்றிலைப் பிடித்த வண்ணம் ரினிஷா வந்து அமர இருவருக்கும் நடுவில் திரை பிடிக்கப்பட்டிருந்தது.

மந்திரங்கள் கூறி திரை விகிய நேரம் இருவரும் மற்றவர் தலையில் கைவைத்து அட்சதைக் கொட்டி ரேஷ்வா எழுந்து நின்று ரினிஷாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

விருந்தினர்கள் அனைவருமாய் மேடையேறி வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.ஒருவழியாய் அனைவரும் முடித்தபின் நண்பர்கள் நால்வரும் மேடையேறினர்.

வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் ரேஷ்வா..என்று கோரஸாய் கத்தி ஆர்பரிக்க ரினிஷா ஷான்யாவையும் ஜீவிகாவையும் கட்டிக் கொண்டாள்.

ஆத்வியை கட்டிக் கொண்டவனாய் ரேஷ்வா,”இது எல்லாமே உன்னால தான் ஆத்வி..தேங்க் யூ பார் எவ்ரிதிங்..”

ரேஷ் நானா நான் என்ன பண்ணேன்!”

உன்னை வாழ்க்கையில மீட் பண்ணாம போயிருந்தேன்னா இப்போ என் நிலைமை என்னனு உனக்கு நல்லாவே தெரியுமே..”

ரேஷ்..”

யோவ் ஹீரோ!!”

ஹா ஹா இல்ல ஜி..ஆத்வி மூலமா தான் நீ மச்சான் ஷான் எல்லாருமே கிடைச்சீங்க..சொல்ல போனா ரினி கூட அதனால தான் அப்படி சொன்னேன்.லைப்ல எது இல்லாம வேணாலும் இல்லாம இருக்கலாம் ஆனா ப்ரெண்ட்ஸ் இல்லாம இருக்கவே கூடாதுனு இந்த ஒரு வருஷத்துல ஒவ்வொரு நாளும் நான் நினைச்சுட்டே தான் இருக்கேன்.

உன் நண்பனைப் பற்றி சொல் நீ யாரென்று சொல்கிறேன் எத்தனை சத்தியமான வார்த்தைகள் இல்ல..நல்ல நண்பர்கள் தான் வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்து.அந்த வகைல உலகத்தின் மிகப் பெரிய பணக்காரன் நான் தான்னு கம்பீரமா சொல்லுவேன்.

எதிர்காலம்னு ஒண்ணு இல்லவே இல்லனு நினைச்சுட்டு இருந்த எனக்கு பேர் புகழ் காதல் கல்யாணம்னு எத்தனை மாற்றம்.கடவுள்கிட்ட எப்பவுமே நான் பெருசா எதுக்காகவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.