(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வினய் அலுவல கம்ப்யூட்டரில் பணியாளர் டேட்டாபேஸில் தேடினான். ஒருவர் மட்டுமே இருந்தார். பரிசோதனைசாலையை சுத்தம் செய்பவர். அவர் பெயர் மாணிக்கம். உள்ளூர் ஆள்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கும்போலமாணிக்கம் அவன் வேலை செய்யும் பிரிவிலேயே வேலை செய்து கொண்டிருந்தார். நல்லதுவினய் இதுவரை யாரிடமும் பேசிப் பழகியதில்லை. அதிரதன் அவனுடைய சீஃப் என்பதால் அவனிடம் பேசுவான். ஓகே இனி அவரிடம் பேச்சு கொடுத்து பழகியபின் இதுபற்றி விசாரிக்கலாம்.

அதிதியை தோளில் சாய்த்துக் கொண்டு மெல்ல நடந்த அதிரதன் இருளில் கவனமாக கால் வைத்தான். பாதையென்று எதுவும் இல்லை மரங்களுக்கிடையே ஒரே திசையை  நோக்கி  நடந்து கொண்டிருந்தான். அப்போது மழை நின்று மேகக்கூட்டம் விலகி விட்டதால் நிலவின் வெளிச்சம் பாதையை காட்டியது.

அந்த  நேரத்தில் நடப்பது பாதுகாப்பில்லை என்றாலும் அங்கேயே நின்றிருந்தாலும் பாதுகாப்பில்லை. எனவேதான் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லும் முடிவினை அதிரதன் எடுத்தான்.

சற்று கரடுமுரடான காட்டுப்பாதை ஏறுமுகத்தில் இருந்ததை இருளில் அவன் கவனிக்கவில்லை.  நீண்ட நடைபயணத்திற்குப்பின் அது ஒரு தெளிவான பாதை கிடைத்தது. அதிதிக்கு இன்னும் தெளிவு வரவில்லைஅல்லது நடந்த சம்பவங்களின் பாதிப்பிலிருந்து மீளவில்லையா என்று தெரியவில்லை. தளர்ந்து  நடந்தாள்.

கண்ணில் தெரிந்த பாதையை அவன் அடைந்ததும்தான் புரிந்தது அது மலைப்பாதை.! மை காட்..  நடுகாட்டிலிருந்து நடந்தே மலைப்பாதைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இங்கிருந்து கீழே இறங்குவது எளிதானதுதான். ஆனால் எந்த பக்கம் செல்வது வலதுபுறமா இடதுபுறமா என்று யோசித்தான்.

இரண்டில் ஒன்றாக வலதுபுறம் நோக்கி  நடந்தான். நடக்க ஆரம்பித்த சற்று நேரத்திலேயே மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. அது மின்விளக்கின் வெளிச்சம்தான்இன்னும் சற்று நெருங்கி பார்த்தால் அது ஒரு வீடு!

யாரும் மனிதர்கள் இருக்கிறார்களா?

அதன் அருகில் செல்ல கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. ஆள் அரவமற்ற மலைப்பாதையில் இதுபோன்று ஒரு தனித்த வீடு இருப்பது வரவேற்கத்தக்க விசயம் அல்ல. பேய் வீடாக இருக்கும் என்ற பயமில்லைஆனால் சமூக விரோதிகள் யாராவது இருக்க வாய்ப்புள்ளது… அதிலும் அந்த மருதுவின் ஆட்கள் இருக்கலாம்…! அவன் தயக்கத்துடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.