(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பின் அவரை காணவில்லை. ஆனால் அவருடைய ஓவியங்களின் தாக்கம் அனைவரையும் குழந்தைகளின் நலன் முக்கியம் என்று உணர செய்தது. ஏனெனில் அத்தனை ஓவியங்களிலும் குழந்தைகளின் பயம்ஏக்கம்தனிமைகவலை அத்தனையும் வெளிப்பட்டன. அவரை தேட ஆரம்பித்து 1970யில் அவரை கண்டுபிடிச்சாங்களாம். அப்புறம் அவார்டெல்லாம் கொடுத்து கௌரவிச்சாங்கலாம்.”

புரியுது, இந்த ஓவியங்களை பார்த்தாலே மனசு கலங்குது. ஐயோ செல்லம் ஏண்டா அழறேன்னு தூக்கி கொஞ்ச தோணுது.”

ஆமாம், ஆனால் ஏன் இந்த ஓவியங்கள் இருக்கின்றன…? எனக்கு தெரிந்து ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன். மொத்தம் அறுபத்தைந்து ஓவியங்கள் உலக பிரசித்தி பெற்றவை எண்று கேள்விபட்டிருக்கிறேன். இங்கேதான் அத்தனையையும் பார்க்கிறேன்.” அவன் ஒவ்வொரு ஓவியத்தையும் பார்க்க ஆரம்பித்தான்.

அதிதி சாப்பாடு தயாராகி விட்டது. வாங்க சாப்பிடலாம்எண்று துரை அழைத்தார்.

சாப்பாடாநீங்க சமைச்சீங்கலா…? உங்களுக்கு சமைக்க தெரியுமா?”

ஆமாம், உப்புமா செய்ய ரொம்பவும் டேலண்டாக இருக்கணும்னு அவசியமில்லை. நீங்க வாங்க சாப்பிடலாம்

நான் சமைச்சிருப்பேன் மாமா. எங்கிட்ட சொல்லியிருக்கலாமே?”

சரி, காலைல செஞ்சுக்கோ. இப்போ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்கஎன்றார். அதிரதன் இன்னும் அந்த ஓவியங்களின் அருகிலேயே நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்,

இங்கே ஹால்ல மட்டுமல்ல எல்லா அறையிலும் இந்த ஓவியங்கள் இருக்கு. மொத்தம் அறுபத்திஐந்து…. பார்க்கறப்பவே மனசை என்னமோ செய்யுதுல்ல. வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்

இருவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர். சுடச்சுட பரிமாறப்பட்ட உப்புமா பசியை தூண்டிவிட சாப்பிட ஆரம்பித்தனர்.

இந்த் வீட்டோட சொந்தக்காரர் ப்ரூனோ.” என்றார்.

என்னது…?” அதிரதன் அதிர்ந்தான். அது அந்த ஓவியரின் பெயராயிற்றேஇவர் தமிழர் என்று அல்லவா சொன்னார்….

அது அவருடைய சொந்த பேரா?”

தெரியாது தம்பி. நாங்க ப்ரூனோன்னுதான் சொல்லுவோம். அவருக்கு குழந்தைகள்னா ரொம்பவும் பிடிக்கும்மதுரை பக்கம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம்  நடத்தி வர்றாங்க. நான் அங்கேதான் மெடிக்கல் அஸிஸ்டெண்டா இருக்கேன். அந்த ஆசிரமத்தோட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.