(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

உங்களை தொந்தரவு செய்து விட்டோமா?” அதிரதன் கேட்க,

இல்லை.. மனுசங்க குரலை கேட்கவே ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. கேட்டுக் கொண்டே நானும் தூங்கிவிட்டேன்

சரி நாங்க கிளம்பறோம்  சார். மீண்டும் ஒருமுறை வந்து பார்க்கிறோம்

உங்கள் சிக்கல் எல்லாம் தீரவும்அனைத்து உண்மைகளும் தெரியவும் அதிதிக்கு வாழ்க்கையின்மீது நம்பிக்கை வந்தபின் என்னை வந்து கண்டிப்பா பார்க்கணும்.”  அவர் விடையளித்தார்.

அவர் கூறியவுடன்… நேற்று இரவு மொத்த வாழ்க்கையைபற்றியும் ரொம்பவும் பேசிவிட்டோமோ என்ற ஐயத்துடன் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.’ மலைப்பாதை இப்போது வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. துரையிடம் பாதையை கேட்டு தெரிந்து கொண்டு தாதிபட்டி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

டியர் ரீடர்ஸ்,

இப்போ நாம் கொஞ்சம் மரபணு பற்றி பேசலாம். மரபணு என்பது நம் மூதாதையர்களிடமிருந்து மரபு வழி வரும் அணுக்களாகும். இவைதான் நம் உருவாக்கத்திற்கு தேவையான விவரங்களை வைத்திருக்கின்றன அவை நம் தாய் தந்தை வழியில் வந்தவையாக இருக்கும். அப்பாபோல கண்… அம்மாபோல மூக்கு என்பதோடு மட்டுமல்லாமல் தாத்தாபோல கோபம்… பாட்டிபோல இனிமையான குரல் என்றும் கண்டிருப்போம்.

இதிலிருந்து நமக்கு ஒன்று புரிந்திருக்கும். நம்முடைய உருவம் மட்டுமல்ல குணாதிசயங்கள்,,, திறமைகள் அத்தனையும் ஜீன்களில் வாயிலாக நமக்கு கிடைக்கின்றன. அது மட்டும்தானா… சில வியாதிகள்கூட பரிசாக கிடைக்கும்.ஜெனெடிக் டிஸீஸ் எனப்படும் சர்க்கரை, இரத்தகொதிப்பு, புற்றுநோய் போன்றவைகூட நமக்கு மரபுவழி வரலாம்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும்… ஒரு குழந்தைக்கான ஜீன்கள் பெற்றோரிடமிருந்து வருகின்றன எனில் அவருக்கு அது போல இல்லையே என்று நினைக்கலாம். உதாரணமாக உங்கள் தந்தையின் கூரிய நாசி என்பது உங்களுக்கு அமையாமல் உங்கள் பிள்ளைக்கு வரலாம். இது எப்படி சாத்தியம்? உண்மைதான் ஜீன் மாற்றம் உங்கள் வழியாகத்தான் நடைபெற்றிருக்கும்.  ஆனால் அதில் இருக்கும் அத்தனை விவரங்களும் ஒரு உயிரின் உருவாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஒரு கோடி விவரங்களிலிருந்து 10 சதவிகிதம் மட்டுமே உங்களை உருவாக்க போதும். மற்றவை…?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.