(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இவர் துரை மாமா..  அப்பாகிட்ட கம்பௌண்டரா வேலை பார்த்தவர்.” என்றாள்.

இன்னும் என்ன யோசிக்கறீங்கஉள்ளே வாங்கஎன்றார்.

இது உங்க வீடா? ?” என்றான்.

இல்லை தம்பி. ஒரு வெளிநாட்டுகாரரோட வீடு. தமிழர்தான்வெளிநாட்டிலிருந்து வந்து செட்டிலாயிட்டார். சொந்தபந்தம் எதுவும் கிடையாது. வீடு. இங்கே வந்து தனியா செட்டிலாயிட்டார். அவருக்கு உடல் நலமில்லைன்னு உதவிக்கு என்னை அனுப்பி இருக்காங்கஎன்றவர் தொடர்ந்து….

பயப்படாதீங்கஅவர் சொல்லித்தான் உங்களை உள்ளே கூப்பிடறேன்.” என்றார்.

அதிதியும் அவனுடைய கையை பிடித்து “வாங்க உள்ளே போகலாம்துரை மாமாவை நம்பலாம்என்றாள்.

அதிரதன் கொஞ்சம் எச்சரிக்கையுடன் உள்ளே சென்றான். உள்ளே இருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் அந்த ஹாலின் அமைப்பு கொஞ்சம் நம்பிக்கையை தந்தது. சுத்தமான இடம்ரசனையுடன் அமைக்கப்படிருந்த பொருட்கள்பளிச்சென்றிருந்த பர்னீச்சர்கள் அவனுக்கு சைக்கலாஜிக்கலாக குட் நோட்ஸ் தந்தன. இது கண்டிப்பாக ஆபத்தான இடம் இல்லை.

இங்கே உட்காருங்க. நான் போய் சூடா காபிபோட்டு எடுத்துட்டு வரேன்.” என்று துரை உள்ளே சென்றார்.

எனக்கு அப்பாடான்னு இருக்குஎன்று அதிதி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

எனக்கும்தான். இந்த இடம் அழகாக இருக்கு. இந்த வீட்டோட ஓனர் ரொம்ப ரசனையானவர்போல..”

ஆமாம்அவருக்கு குழந்தைகைள்னா ரொம்பவும் பிடிக்கும்போலிருக்கு.. அந்த போட்டோக்கள்.. ஓவியங்கள்…   நிறைய பொம்மைகள் எல்லாம் இருக்கு. அந்த கனப்பு அடுப்புகிட்டகூட பாருங்க அந்த பொம்மை அழகா இருக்குல்ல.”  பேசிக் கொண்டே எழுந்த அதிதி சுவற்றில் மாட்டியிருந்த பெயிண்டிங்குகளை பார்த்தாள்.

ரதன்இந்த ஓவியமெல்லாம் ரொம்ப அழக இருக்கு. அத்தனையும் அழகான குழந்தைகளோடதுஆனால்…. ஏன் ஒவ்வொரு ஓவியத்திலும் குழந்தைங்க அழுதிட்டே இருகாங்க. மனசுக்கு கஷ்டமாக இருக்குஎன்றாள். அவள் அருகில் வந்த அதிரதன்,

இதெல்லாம் வெனிஸை சேர்ந்த ஒரு ஓவியர் வரைந்தவைகள்அவருடைய பெயர் ப்ரூனோ அமடியோ. இவர் நல்ல ஓவியர். 1930களில் வெனிஸிற்கு வரும் டூரிஸ்டுகளுக்கு இந்த ஓவியங்களையெல்லாம் வரைந்து கொடுத்திருக்கார். அப்புறம் இரண்டாம் உலக்ப்போருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.