(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

நடந்தான்.

மழை மீண்டும் ஆரம்பித்து விட்டது. மழையில் நனைய அவன் தயங்கவில்லை என்றாலும் இப்போது அதை செய்வதால் குளிரில் இருக்கும் சக்தியும் குறைந்து விடும்.. இப்போதைக்கு உள்ளே செல்லாமல் அந்த கட்டிடத்தின் வாசலிலேயே அமர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.

அவன் அதிதியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை  நோக்கி  நடந்தான். மழையினால் நனையாதவாறு வீட்டின் வராண்டாவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள். அதிதிக்கு இப்போது பரவாயிலை என்று தோன்றியதுபோல..

ம்இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கு. விடிந்ததும்  நாம் கிளம்பலாம்.” என்றாள்.

சரி, ஆனால் நீ பேசாதே. உள்ளே யார் இருக்கிறார்கள் என்றே தெரிவில்லை. நம்முடைய குரல் கேட்டு வந்துவிடப் போகிறார்கள். ஆபத்தானவர்களாகக்கூட இருக்கலாம்என்று மெல்லிய குரலில் சொன்னான்.

சரி சரிஎன்று ஒப்புக் கொண்ட அதிதி அமைதியானாள். அவளுக்கு அன்று நடந்தவற்றிற்கான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை! யார்எதற்காகஅவ்வாறு செய்தார்கள் என்பதே தெரியவில்லை.

அதே சமயம் அதிரதனுக்கு ஒரு எண்ணம் வந்தது. ஒருவேளை இந்த வீடு அந்த வீடாக இருக்குமோதாதிபட்டி தலைவர் சொன்னதனியொருவன்வீடு  இதுவாக இருக்குமோஅப்படியெனில் அவர் நல்லவரா கெட்டவராஏன் இங்கு தனித்து வசிக்க வேண்டும்…? என்று யோசித்தான். மழை வேறு வலுத்து பெய்து சாரல் கரம் நீட்டி அவர்களை பூந்தூறலாக நனைக்க ஆரம்பித்தது.

அப்போது வீசிய மலைக்காற்று குளிர் ஊசிகளை அவர்கள்மீது  இறக்க..  உடல் நடுங்க ஆரம்பித்தது. இருவரும் நடுங்க ஆரம்பித்தபோது வீட்டின் கதவு திறந்தது. ஒரு வயதான மனிதர் வெளியே வந்தார். அவர்தான் அந்த வீட்டில் வசிப்பவரா?

ஏன் மழையில் நனைஞ்சிட்டு இருக்கீங்க. உள்ளே வாங்கஎன்றார்.

இல்லை பரவாயில்லை. நாங்கள் இங்கேயே…” அதிரதன் சொல்ல, அவர் அதிதியை பார்த்துவிட்டு,

அட நீ அதிதிதானே. ங்கே என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்…? இது யார் உன் கணவராஎன்று ஆச்சரியமாக கேட்டார்.

துரை மாமாநீங்க இங்கே என்ன செய்றீங்க?” அவளும் ஆச்சரியமாக கேட்டாள். அதிரதனிடம் திரும்பி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.