(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

போட்டேன்மா எனக்கு அந்த ஆள பாத்தா எங்க ஊர்ல ஆடு கோழியெல்லாம் அடிச்சி சாப்புடுற காட்டேரி மாரியே இருந்துச்சு அதான் நான் பயத்துல எதுவும் கேக்குல மா கடைசில நம்ம தம்பி வெச்சிருந்த பூவும் கடிதமும் தண்ணீல மிதந்தது  தான் மிச்சம் இம்புட்டு நடத்துற்கு மா நீங்க இல்லாத போது நான் நடந்த அம்புட்டையும் சொல்லி புட்டேன் இனியாச்சு தம்பிய பத்திரமா பாத்துக்கோ மா நான் சொன்ன எல்லாம் நெசம்தான் இது என் ஆத்தா முண்டகண்ணியம்மா மேல சத்தியம் சரி எனக்கு நேரமாச்சு எனக்கு கொடுக்க வேண்டியத கொடுத்தீங்கனா நான் கிளம்பிடுவேன்மா என அவள் சேலை முந்தானையை உதறி கொண்டே சொல்ல தன் பேக்கில் இருந்து 500 ரூபாயை எடுத்து அவளிடம் யோசிக்காமல் கொடுத்தாள் மாலதி அம்மா இன்னிக்கு சம்பளம் 200 ரூபாய் தான் மா என பொன்னம்மா சொல்ல ஓ.... சரி பரவால வெச்சிக்கோ பொன்னம்மா எனக்கு நீ பெரிய உதவி செஞ்சிருக்க என மாலதி சொல்ல 500 நோட்டை வாங்கி அதை உத்து பார்த்து கொண்டு சரிகம்மா அப்ப நான் போய் வாறேன் என சொல்லி விட்டு அங்கிருந்து நடையை காட்டினாள் பொன்னம்மாள் அந்நேரம் விஷ்வாவின் ரூமுக்குள் நுழைந்தால் மாலதி.

ன்வீர் வீட்டில்...

சூடான காப்பியிலிருந்து ஆவி பறக்க பறக்க.... டைனிங் டேபிளில் வேத் மன்வீர் மற்றும் கவின் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் மாரி மாரி பார்த்து கொண்டிருந்தனர்.என்ன மன்வீர் கவின் என்ன எதுவும் பேசாம இருக்கீங்க என் மேல எதாவுது கோவமா சொல்லுங்க எதுவா இருந்தாலும் பேசி தீதுக்கலாம் என வேத் சொன்ன உடனே இல்ல இல்ல இல்ல அப்படியெல்லாம் ஒன்னுமில வேத் என மன்வீரும் கவினும் ஒரே சமயத்தில் மறுப்பு தெரிவித்தனர் என்ன வேத் இப்படி சொல்ற நீதான் எங்க மேல கோவதுல இருக்கணும் சொல்லப்போன அத நினைச்சி தான் நானும் மன்வீரும் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம் என கவின் கூற ஓ.... அப்படியா சரி நீங்க சொல்றதும் கரெக்ட் தான் நான் தான் உங்க மேல கோவமா இருக்கணும்ல ஓ கே அத எப்படியாவுது அந்த தேவேஸ்வர நீங்க கொல்லனும் அதுக்கு என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப் பும் நான் பன்றேன் என்ன சொல்றீங்க என வேத் உரிமையோடு அவர்களை பார்த்து கேட்க என்ன சொல்ல சொல்ற வேத் தேவேஸ்வர கொல்லனுமா என்ன நடந்துன்னு உனக்கு தெரியுமா இப்படி திடிர்னு வந்து கொல்லணும்னு சொன்னா என்ன பண்றது என அப்பா செத்து போனதுக்கு காரணம் தேவேஸ்வர் தான்னும் அது மட்டுமில்ல உங்களுக்கு கொஞ்ச நேரத்துல உங்களுக்கு தெரிய வைக்குறேன் நம்ம போட்ட பிளன்னா நம்ம தான் முடிகனும் இப்படி பாதிலேயே விலக நான் விரும்ப மாட்டேன் விடவும் மாட்டேன் என சொல்லி விட்டு காபியை எடுத்து குடிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.