(Reading time: 24 - 47 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அந்த அஞ்சாம் நம்பர் ரூம் பக்கம் யாரையும் அனுப்பாத சரியா டாக்டர் யாரையும் அந்த பக்கம் வர கூடாதுனு சொல்லிருக்காறு என பாண்டி சொல்ல சரி சரிடா நான் யாரும் அந்த பக்கம் வராத மாரி பாத்துக்குறேன் ஏன்டா பாண்டி ஏண்டா டாக்டர் யாருமே இல்லாத ரூம்ல தனியா என்ன பண்ணுராரு பேஷன்டும்  இல்ல எந்த கெஸ்ட் டும் இல்ல எதாவுது தில்லு முள்ளு வேல பண்ரார என பழநி கேட்க ஜிப்பை சர்ரென போட்ட பாண்டி டேய் வாய மூடுடா அது எதுவா இருந்தா நமக்கென்ன இந்த மாரி வேற யார் கிட்டயாவுது நான் இப்படி  கேப்பனா அதனால தான யாருமில்லாத ஆபேரஷன் ரூமுக்கு வெளிய ரெட் லைட்ட ஆன் பண்ணி யாரும் அந்த பக்கம் போகாத மாரி வெச்சிருக்கன் என பழநி சொல்ல நீ பொலச்சிப்படா தம்பி சரி சரி வா சாப்ட போலாம் வயிறு கபா கபான்னு இழுக்குது என பாண்டி பழநியின் தோல் மேல் கை போட்டு கொண்டு சென்றான் இதையனைத்தையும் வெஸ்டர்ன் பாத்ரூமின் மேல் அமர்ந்து கொண்டு ஒட்டு கேட்டு கொண்டிருந்தான் கிரிஷ்.

ஓ... இப்படியெல்லாம் வேற இந்த ஹாஸ்ப்பிட்டல்ல நடக்குதா சாராவ பத்தி தெரிஞ்சிகளலாம்னு வந்தா இப்ப டாக்டர பத்தி தெரிஞ்சி கலாம் போல இருக்கு சரி நம்ம நியூஸ் பேப்பர் க்கு அடுத்த ஹாட் டாபிக் கடைச்சாச்சு எஸ் என கையை தூக்கி உற்சாகத்தில் கிரிஷ் கத்த என்ன சத்தம் யாரு என சுத்தம் செய்ய வந்த கிளீனர் பாய் கேக்க டக்கென்று பிளஷை அழுத்தி விட்டு வெளியே ஓடி விட்டான் கிரிஷ்.

மாலதி வீட்டில்....

விஷ்வா எதையும் நினைக்காம ஒழுங்கா தூங்கனும் ஒ கே டாடி உன்ன நாளைக்கு தீம் பார்க் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காறு செல்லம் சரியா என போர்வையை  போத்தி விட்டு மாலதி ரூமை விட்டு வெளியே வர திடீரென பவர் கட் ஆனது ஓ ஷீட் என்ன இந்த நேரத்துல போய் கட் பண்ராங்க அப்ப எப்படி மனிஷாங்க தூங்குவாங்க ஸ்டுபிட்ஸ் விஷ்வா மா பயப்புடாத அப்படியே படுத்துட்டு இரு மம்மி போய் கேண்டில் எடுத்துட்டு வறேன் என் ப்ரேவ் பாய்ல அதுவரைக்கும் கத்த கூடாது ஒ கே  என விஷ்வாவிடம் சொல்லி விட்டு கேண்டலை  எடுக்க கிச்சனுக்குள் சென்றாள் மாலதி டப்பென  கேண்டல்ல பத்த வைத்து விட்டு விஷ்வாவின் ரூமை நோக்கி நடந்தாள் மாலதி.விஷ்வா பரவாலையே அமைதியா இருக்க குட் பாய் என மாலதி  போர்வையை  தூக்கி பார்த்தால் விஷ்வாவை காணவில்லை அதை பார்த்த மாலதி அதிர்ச்சி அடைந்து விஷ்வா விஷ்வா எங்க போன என பதட்டத்துடன்  கையில் கேண்டலை வைத்து கொண்டே வியர்வை சொட்ட சொட்ட இருட்டில் வீடு முழுவதும் தேடினால் அப்போது ட்ரிங் ட்ரிங் என போன் அடிக்க ஹலோ என்னங்க நம்ம விஷ்வாவ காணுங்க சீக்கிரம் வாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என மாலதி அழ என்ன சொல்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.