(Reading time: 31 - 62 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பெருசா நான் தர போறேன் தேவ் அப்பறம் இந்த ரதிய பத்தி நீங்க முழுசா தெரிஞ்சிப்பீங்க தேவ் என பழி வாங்க துடிக்கும் நோக்கத்துடன் ரதி மெதுவாக மேலோட்டமாக கூறினாள்.

றுநாள்....

மன்வீர் நான் என் பார்ம் ஹௌஸ நோக்கி தான் போயிட்டு இருக்கன் இன்னிக்கு என் டிரைவரும் வரல லீவ் போட்டுடான் என ரதி சொல்ல

நீங்க கவல படாம ட்ரைவ் பண்ணுங்க மேம் நான் உங்கள பாலோ பண்ணிடுத்தான் வறேன் அப்பறம் ஒரு சின்ன ரெக்யூஸ்ட் சாரக்கு கால் பண்ணி சாப்பிடியா ன்னு மட்டும் கொஞ்சம் கேளுங்க கேளுங்க என மன்வீர் சொல்ல

கண்டிப்பா கேக்குறேன் மன்வீர் அவ கிட்ட இன்னும் நான் எதுவும் சொல்லாத துக்கு காரணம் அவ கிட்ட நான் கிலோஸ் சா பேசுரேன்னு தெரிஞ்சா தேவேஸ்வர்க்கு சந்தேகம் வந்துரும் அப்பறம் நம்ம பிளான்னும் கெட்டு போய்டும் சாராக்கு தேவ இல்லாத டென்ஷன இதெல்லாம் சொல்லி நான் உருவாக்க விரும்பல சரி இப்ப நான் கால் பன்றேன் என சாரவின் நம்பரை தட்டினாள் ரதி.

ஹலோ சாரா ....எங்க இருக்க .. என்ன பண்ற.. சாப்டியா மா?என ரதி கேட்க

ஹலோ நான் சாரா தான் பேசுறேன் நீங்க யாரு எங்க அம்மா நம்பர்ல இருந்து பேசுறது சாப்டியா  எங்க இருக்க மான்னு  வேற கேரிங்கா கேக்குறீங்க என சாரா ஆச்சர்யமாக கேட்க

சாரா நான் உன் அம்மா தாண்டி பேசுறேன் என்ன உனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கா நான் இப்படி பேசுறது என ரதி கேட்க

என்ன மா நீங்களா என்னால நம்பவே முடியல நான் சாப்டேன் நீங்க என சாரா கேட்க

ம்.. நானும் சாப்டேன் மா இன்னிக்கு லன்ச் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா சாப்படலாம் நம்ம பார்ம் ஹௌஸ்க்கு வரியா நான் அங்க தான் போய்ட்டு இருக்கன் என ரதி கேட்க

ஓ... எனக்கு வரணும் தான் இருக்கு பட் ஷூட்டிங் இருக்கே என சாரா பேசி கொண்டு இருக்கும் மோது திடீரென அழுக்கு சட்டை பேண்ட்டுடன் பரட்டை தலையுடன் ஒருவன் காரின் முன் வந்து நின்றான் அதை பார்த்து வேகமா பிரேக்கை போட்டால் ரதி சாரா.ஆள் இல்லா காட்டு ரோட்டில் திடீரென வந்து நின்றஅவனை பார்த்த ரதி ஏய் யார் நீ எதுக்காக இப்படி என் கார் முன்னாடி வந்து நிக்குற என அவள் கேட்க கேட்க எதுவும் பேசாமல் இருந்தான் அவன்

ஏய் உன்ன தான கேக்குறேன் காது கேக்கல என ஹார்னரை நீண்ட நேரமாக அடித்தால் ரதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.