(Reading time: 20 - 39 minutes)
Kaarigai
Kaarigai

அதெல்லாம் போகட்டும். முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு பேசிட்டு...நீ இப்போ வா என் கூட" -லட்சுமி

"அம்மா...நான்...நானும் உமாவும் நாளைக்கு திரும்ப ஹாஸ்டலுக்கே போயிடறோம்" பவித்ரா இதை சொல்வாள் என ஓரளவு எதிர்பார்த்திருந்தார் லட்சுமி.

"இப்போ எதுக்கு இப்படி ஒரு முடிவு?" அவளை தீர்க்கமாக பார்த்தபடி கேட்டார் லட்சுமி.

"அம்மா, இதெல்லாமே என் பிரச்சனை. எனக்கு உடம்பு முடியலைன்னு நீங்க இங்க கூட்டிட்டு வந்திங்க. இப்போ அது சரி ஆயிடுச்சு... நான் இனி வேலைக்கு போக தொடங்கிடுவேன். இந்த மாதிரி இன்னும் நிறைய பிரச்சனைகள் வரலாம். அதுல எல்லாம் நீங்களும் சாரும் தேவை இல்லாம கஷ்டப்படறதை நான் விரும்பல. ப்ளீஸ் மா. இதுக்கும் மேல என்னை வற்புறுத்தாதீங்க" கண்கள் கலங்க சொல்பவளை அமைதியாக பார்த்தவர் அவளின் கையை மெல்ல அழுத்தி கொடுத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தார்,

பவித்ராவின் அறையில் இருந்து வெளியே வந்தவர் சத்யாவிடம் சென்று "சத்யா போ. போயி அவ கிட்ட பேசு" எனவும் அவரை ஒரு முறை பார்த்தவன் எழுந்து சென்றான்.

"பவித்ரா..." சத்யாவின் குரலில் திரும்பியவள், லட்சுமி சத்யாவை அனுப்பி வைப்பார் என எதிர்பார்த்திருக்கவில்லை. உள்ளே நுழைந்தவனின் கைகளுக்கு சென்றது அவளின் பார்வை. கட்டிலில் அமர்ந்திருந்தவளின் எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் கையை பார்த்தவள், "உங்க கை ...எப்படி இருக்கு?" என்றாள் அதில் இருந்து பார்வையை நகர்த்தாமல்.

"ஹ்ம்ம் கைல ரொம்ப ரொம்ப சின்ன காயம் தான். ரெண்டு நாளுல சரி ஆயிடும்" அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல சொன்னவனை பார்த்தவள், "சாரி சார்" என்றாள்  மெல்லிய குரலில்.

"சாரியா எதுக்கு?" லக்ஷ்மியை போலவே கேட்டான் சத்யா.

"என்னால தான் உங்களுக்கு அடிபட்டிச்சு. என்னால உங்களுக்கும் அம்மாக்கும் தேவை இல்லாத பிரச்சனைகள்..." அவள் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டவன், "பவித்ரா, இதுக்கு நீ எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. நீயா என்னை அந்த இடத்துக்கு வர சொன்ன?" என்று கேட்டவனிடம் இல்லை என்பதை போல தலை அசைத்தாள் பவித்ரா.

"நானே தான வந்தேன். அந்த இடத்துல அந்த மாதிரி ரவுடிக கிட்ட எந்த பொண்ணு மாட்டிருந்தாலும் நான் ஹெல்ப் பண்ணிருப்பேன். அது என்னுடைய விருப்பத்தின் பேரில் நான் பண்ணுனது. அதுக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும். இதுக்காக நீ தயவு செஞ்சு கில்டியா பீல் பண்ணாத ப்ளீஸ்..." பொறுமையாக அதே சமயம் தெளிவாக சொன்னான் சத்யா.

"சார் இப்படி சொல்றது உங்களுடைய அம்மாவுடைய பெருந்தன்மை. ஆனா எனக்குன்னு ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.