மனசாட்சி இருக்கு. அன்னைக்கு நீங்க சொன்னது கரெக்ட் தான். என் பிரச்சனைகளை நான் தான் பார்த்துக்கணும். ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும் போது உங்களையோ இல்லை உங்களை மாதிரி வேற யாரையோ டிபன்ட் பண்ணி இருக்க கூடாது. நானும் உமாவும் நாளைக்கு ஹாஸ்டலுக்கு கிளம்பி போயிடறோம் சார். மன்டேல இருந்து நான் ஆபீஸ்க்கு வரேன்.இதுக்கு மேல நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பலை. ப்ளீஸ்" அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் ஒரு நீண்ட மூச்சை எடுத்து கொண்டு அவளின் முகம் பார்த்தான்.
"பவித்ரா, நீ இந்த வீட்ல கொஞ்சமாவது நிம்மதியா இருந்தியா இல்லை கட்டாயத்தின் பேருல பிடிக்காம இருந்தியானு எனக்கு தெரியல. உன்னை இங்க இருக்க சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. உன்னை இங்க இருனு உரிமையா கேட்கவும் முடியாது. இங்க நீ இரண்டு வாரங்களா இருக்க. இன்னும் கொஞ்ச நாள், இங்க இதெல்லாம் சகிச்சுட்டு இருக்க முடியுமா?" சத்யா சொல்லவும் ஏதோ பதில் சொல்ல வந்தவளை தடுத்தவன், தன்னுடைய கையில் இருந்த மொபைலை எடுத்து ஆன் செய்து அதில் இருந்து எதையோ தேடி எடுத்து அவளிடம் நீட்டினான்.
என்னவென புரியாமல் அவனை ஒரு பார்வை பார்த்தவள் அந்த போனில் இருந்ததை படிக்க தொடங்கினாள். இரண்டு நிமிடங்கள் அதை படித்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் குழப்பம் இருந்தது.
"நீ ரெண்டு நாள் முன்னாடி ஆஸ்ரம பெண்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னியே...அதுக்கு தான் இது. சுய உதவி குழுக்கள் மூலமா தொழில் துவங்க பெண்களுக்கு அரசாங்கம் பண்ற உதவிகள் பற்றிய டீடெயில்ஸ் தான் அதெல்லாம். அதுக்கு தேவையான பார்ம்ஸ் எல்லாம் நான் வாங்கிட்டேன். இனி அதுக்கு வேணும்ங்கற டீடெயில்ஸ், என்ன மாதிரியான சிறுதொழில் பண்ண போறோம், அதுக்கு உண்டான இட வசதி, அதுக்கு என்னென்ன அடிப்படை தேவைகள்னு எல்லாம் ரெடி பண்ணனும். இதெல்லாம் நீ தான் பண்ணனும். இதற்க்கான அப்ப்ரூவள் வாங்கறது, நம்ம தயாரிக்கிற பொருளை மார்க்கெட்ல கொண்டு சேர்க்கறது மாதிரியான வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஆல்ரெடி அதுக்காக என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வெச்சுருக்கேன். அது எல்லாம் பிரச்சனை இல்லை பண்ணிடலாம். ஆனா இதுக்காக நெஸ்ட் பியூ டேஸ் கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும். நீ இங்கயே இருந்தா இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணவும் அந்த ஆஃபீஸ்க்கு உன்னை கூட்டிட்டு போயிட்டு வரவும் கொஞ்சம் சுலபமா இருக்கும். பட் நீ ஹாஸ்டல்ல தான் இருக்கணும், அது தான் உனக்கு கம்பர்ட்டபிளா இருக்கும்னு பீல் பண்ணுனாலும் பரவால்ல. நான் மேனேஜ்