பண்ணிக்கறேன்" சொல்லியவனை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா.
"என்ன மனிதன் இவன், ஏதோ ஒரு வார்த்தை விவரம் கேட்டானே என்று சொன்னதற்காக இவ்வளவு செய்திருக்கிறான்... எதற்காக? யாருக்காக? அவனுக்காகவா? இல்லையே... அவனுக்கு ஆக வேண்டிய காரியத்துக்காக என்னிடம் பேசுவதை போல எனக்காக அவன் பேசிக்கொண்டிருக்கிறான்"
அவளின் பதிலுக்காக அவள் முகம் பார்த்து கொண்டிருந்த சத்யா, "பவித்ரா உனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னா பரவால்லை. கண்டிப்பா இதை செய்யணும்னு நான் சொல்லல." அவளின் மௌனம் ஏன் என புரியாமல் சொன்னான் சத்யா.
"நான் இங்க இருக்கேன் சார்" பவித்ராவின் பதிலில் தான் சத்யாவுக்கு புரிந்தது, அவன் மூச்சை பிடித்து கொண்டு இத்தனை நேரம் அவளின் பதிலுக்காக காத்திருந்தான் என.
"தேங்க்ஸ் பவித்ரா" என்றவன் "அம்மா சாப்பிடாம இருக்காங்க. போலாமா?" எனவும் தான் இங்கே இருக்கிறேன் என்று சொன்னதற்காக தனக்கு நன்றி சொன்னவனையே பார்த்தபடி அவன் பின்னே சென்றாள் பவித்ரா.
அதன் பின் அவன் சொன்னதை போல ஒவ்வொன்றாக இருவரும் சேர்ந்து பேசி திட்டமிட்டார்கள். அலுவலக வேலை முடித்து கிடைக்கும் நேரங்களை இதற்க்காகவென இருவரும் ஒதுக்கினர். அவள் பின்னால் நின்று அவளுக்கு வேண்டிய வழிமுறைகளை சொன்னாலும் எல்லா செயல்களிலும் இடங்களிலும் அவளை முன்னிறுத்தினான். அவள் வர தேவை இல்லாத இடங்களுக்கு கூட அவளை கூட்டி சென்றான். அங்கு எல்லாம் அவன் செய்வதையும் பேசுவதையும் வெறும் பார்வையாளராக மட்டும் நின்று பார்க்கும் போது அவளுக்கு கூட தோன்றியது எதற்க்காக நம்மையும் இங்கு எல்லாம் கூட்டி கொண்டு வருகிறான் என.
"உனக்கு தெரியாமல் எதுவுமே இதில் இருக்க கூடாது பவித்ரா, எல்லாமே உனக்கு தெரிந்திருக்க வேண்டும்" என்று அவன் சொன்ன போது அவளும் அதன் பின் அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவன் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
எத்தனை திட்டமிடலுடன் ஒவ்வொன்றையும் செய்கிறான் என பலசமயம் அவள் அவனை கண்டு பிரம்மித்து போனாள்.
ஆஸ்ரம பெண்களோடு சேர்ந்து கலந்துரையாடி தையல் கூடமும் அடுமனையும் என பவித்ரா முடிவெடுத்த போது அது சம்மந்தப்பட்ட துறைகளில் இருக்கும் தன் நண்பர்களிடம் அவளை அழைத்து சென்று அதற்க்கு என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள செய்தான். இந்த இரண்டு மாத இடைவெளியில் ஒரு நல்ல நண்பனாக அவள் தயக்கங்களை