(Reading time: 20 - 39 minutes)
Kaarigai
Kaarigai

உடைத்தான்.

"இந்தாங்க மேடம். இது உங்க லோன் அப்ப்ரூவள் லெட்டர். இது உங்க செக். ஆல் தி பேஸ்ட் மேடம்" என அந்த வங்கி அலுவலர் அவளிடம் அந்த பேப்பர்ஸை தந்தபோது கண்கள் கலங்க, "சத்யா ரொம்ப தேங்க்ஸ்" வேறொன்றும் சொல்ல தோன்றாமல் நின்றவளை பார்த்து புன்னகைத்தவன், "யு டீசெர்வ்  இட் பவி " என்றான் முழுமையான சந்தோசத்துடன்.

"அப்பறம் பவி   இன்னொரு முக்கியமான விஷயம்" என்றவனை என்ன என்பதை போல பார்த்தாள்.

"நீ ரொம்ப உணர்ச்சி வசப்படும் போது மட்டும் என்னை சத்யானு கூப்டற. ஐ திங்க் உனக்கு என்னை சார்னு கூப்டறதா இல்லை சத்யானு கூப்டறதான்னு குழப்பம்னு. நீ என்னை தயவு செஞ்சு சத்யானு கூப்டு ப்ளீஸ். நீ என்னை சார்னு கூப்பிடும் போதெல்லாம் நான் ஆபீஸ்ல இருக்கற மாதிரியே ஒரு பீல் வருது" என உதட்டில் புன்னகையுடன் கண்களில் ஒரு வித குறும்புடன் அவன் சொன்னபோது பவித்ராவால் மறுக்க முடியவில்லை.

அடுத்த ஒரு மாதத்தில் ஆஸ்ரம இடத்திலேயே இந்த கட்டிடங்களை கட்டி அதற்க்கான ஒவ்வொரு பொருளையும் பார்த்து தேர்வு செய்தனர்.  .

"இதுக்கு இந்த மாதிரி விழா எல்லாம் வேண்டாம் சத்யா, எதுக்கு இதெல்லாம்? நாளைக்கே வேலையை தொடங்கிடலாமே?"  என அவள் மறுத்த போதும் அவளை அவன் தான் சம்மதிக்க வைத்தான்.

"பவித்ரா, இந்த பங்க்ஷன் கண்டிப்பா நடக்கணும். இது ஆடம்பரத்துக்காக இல்லை. இப்படி பண்ணும்போது நமக்காக நம்மள வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக செய்ற முயற்சினு எல்லார் மனத்திலும் ஒரு நம்பிக்கையும் இதை நல்ல படியா பண்ணனும்னு ஒரு உத்வேகமும் வரும்" -என சத்யா சொன்னபோது அவளால் மறக்கமுடியவில்லை.

"அம்மா, நெஸ்ட் வீக், வெட்னெஸ் டே பன்க்ஷனுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். அன்னைக்கு மதியம் நம்ம கையாள எல்லாருக்கும் அசத்தலான லஞ்ச் ரெடி பண்றோம்" சத்யா லட்சுமியிடம் சொல்ல, "சத்யா அதெல்லாம்..."என அவள் மறுக்க முயன்ற போது, "பவித்ரா, இந்த பங்க்ஷன், லஞ்ச் எல்லாம் என் செலவு. சோ நீ இதுல எந்த மறுப்பும் சொல்ல கூடாது" என அவளை தடை செய்தான்.

"சரி நான் ஒன்னும் சொல்லல. ஆனா அதுக்கு ஏன் அடுத்த வெட்னெஸ்டே வரைக்கும் வெயிட் பண்ணனும்?" என புரியாமல் சத்யாவை கேட்டாள் பவித்ரா.

"எல்லாம் ஒரு காரணமா தான் பவித்ரா. ஆனா என்னனு கேட்க கூடாது. அது சர்ப்ரைஸ்" என்றான் சத்யா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.