(Reading time: 20 - 39 minutes)
Kaarigai
Kaarigai

அவள் மனம் புரிந்தவராக அவளின் கையை பிடித்து கொண்டார் லட்சுமி.

சந்நிதானத்திற்குள் நுழைந்தவர் பவித்ராவின் பேரில் அர்ச்சனை செய்ய சொல்ல, "அம்மா எதுக்கு?" என்று இடையிட்டவளை வாயில் விரல் வைத்து அமைதியாக சாமி கும்பிடும்படி சொன்னவர் கண்களை மூடி கொள்ள பவித்ராவும் அமைதியாக கர்ப்பகிரகத்தில் இருந்த அம்மனை பார்த்தாள். அவள் மனதில் ஒரு அமைதி சூழ்ந்தது. மெல்ல கண்களை மூடியவள் மனம் அந்த அமைதியில் லயித்து போனது. கண்களை திறந்த லட்சுமி அவளின் அமைதியை கலைக்காமல் அமைதியாக நின்றார். அய்யர் கொண்டு வந்து பிரசாதம் தரவும் கண்களை திறந்து தீபாராதனையை கண்களில் ஒற்றி கொண்டவள் குங்குமத்தை நெற்றியில் இட்டு கொண்டாள். அந்த குங்குமம் அவள் முகத்திற்கு ஒரு பொலிவை தருவதை போல இருந்தது லக்ஷ்மிக்கு. மூவரும் அங்கிருந்த தூணுக்கு கீழே அமர்ந்தனர்.

"எனக்கு இந்த கோயில் ரொம்ப புடிக்கும் பவித்ரா. எப்போ எல்லாம் மனசு சரி இல்லாம போகுதோ அப்போ எல்லாம் இங்க வந்தா ஏதோ தன்னால ஒரு அமைதி கிடைக்கிற மாதிரி ஒரு பீல்." லட்சுமி சொல்ல, ஆமோதிப்பக தலை அசைத்தாள் பவித்ரா.

"உண்மை தான்மா. எனக்கும் கூட ஏதோ மனசுல இருந்த ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு" என்றாள் பவித்ரா. மூவரும் பேசியபடி அங்கே அமர்ந்திருக்க மெல்ல இருட்ட தொடங்கியது.

"சாரி பவிம்மா, நம்ம கெளம்பலாமா? மணி ஏழுக்கு மேல ஆச்சு" என லட்சுமி சொல்லவும் மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வீட்டு வாசலை அடைந்த போது வீடே இருளில் முழுகி கிடந்தது.

"என்னம்மா வீடே இருட்டா இருக்கு. சத்யா வீட்ல தான இருந்தாரு" பவித்ரா கேட்கவும் "ஆமாம் பவி. வா போயி பாக்கலாம்"என மூவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.

மூடியிருந்த கதவில் மெதுவாக கையை வைத்தாள் பவித்ரா. கை பட்டதும் அது திறந்து கொண்டது. வீட்டிற்குள்ளும் ஒரே இருட்டாக இருந்தது. மெல்ல இரண்டடி எடுத்து வைத்து முன்னே சென்றவள், "அம்மா வீடு திறந்திருக்கு, சத்யா எங்க?" என கேட்க, எந்த பதிலும் இல்லை.

"அம்மா...உமா" என அழைத்து பார்த்தாள் பவித்ரா. அதற்குள் டம் எனும் சத்தத்துடன் ஏதோ வெடிக்க "அம்மா" என அலறிக்கொண்டே கண்களை இறுக மூடி கொண்டாள் பவித்ரா.

 "ஹாப்பி பர்த்டே டு யூ...ஹாப்பி பர்த்டே டு யூ...ஹாப்பி பர்த்டே டு டியர் பவி...ஹாப்பி பர்த்டே டு யூ..." சத்தத்தில் கண்களை மெல்ல திறந்தாள் பவித்ரா.

வீடெல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கங்கே பலூன்கள் சிதறிக்கிடக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.