(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

துரோகம் பண்ணாங்க. அதே மாதிரி தான் எங்க தாத்தாவும் என் பேர்ல வீட்டை எழுதி வைச்சிட்டாரு. அதனால சித்திக்கு என் மேல கோவம் வந்துருச்சு. இப்ப நான் என்ன சொல்றேன்னா சித்தியோட குடும்பம் இந்த வீட்டிலேயே வசிக்கட்டும். காலத்துக்கும் அவங்க அங்கேயே இருக்கட்டும் எனக்கு அந்த வீடு தேவை இல்லை." அதிதி கூறினாள்.

'இதுவும் சரிதான். எதனால பிரச்சனை வந்ததோ அந்த பிரச்சனையை தீர்த்தாகணும். இல்லேனா காலத்துக்கும் அந்த பழிவாங்கும் செயல் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். அதிதிக்கு இங்கேயே வேற ஒரு வீடு கட்டித் தரேன். அவள் எப்போ இந்த கிராமத்துக்கு வந்தாலும் அங்கு நிம்மதியாக இருந்திட்டு வரட்டும்." என்ற கங்காதரன் தொடர்ந்து

ஏன்னா வீடுங்கறது நிம்மதியாக வாழ வேண்டிய இடம் மட்டுமேஅதற்கு எந்த பண மதிப்பும் கிடையாது. அன்பும் நிம்மதியும் அமைதியும் மட்டுமே ஒரு வீட்டை மதிப்பு மிக்கதாக ஆக்கும். அஞ்சலை குடும்பம் அந்த வீட்டில் வசித்து வரட்டும்" என்றார்.

"அதிதியின் விருப்பத்தையும் கங்காதரன் ஐயா சொன்னதையும் இந்த பஞ்சாயத்து ஏற்றுக்கொள்கிறது. இனிமேல் அஞ்சலையின் குடும்பம் சண்முகம் ஐயாவின் வீட்டில் வசித்து வரலாம் என்று ஒப்புக் கொள்கிறது."

"பஞ்சாயத்திற்கு ம் இந்த ஊர் மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்பொழுதே என் தாத்தாவின் வீட்டை காலி செய்து விடுகிறேன். இன்று மாலையில் இருந்தே சித்தி குடுமபம் அங்கு குடியேறலாம் என்பதையும் பஞ்சாயத்து முன்பு ஒப்புக் கொள்கிறேன்" என்று அதிதி பேசி முடித்தாள்.

"சரிமா, நீ வீட்டு சாவிய செல்வா அய்யாவிடம் கொடுத்துவிடு. மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுக்கட்டும். இத்துடன் இந்த பஞ்சாயத்து கலைகிறது " என்று தலைவர் கூட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த முடிவு அஞ்சலைக்கு ஆச்சரியத்தை தந்தது. ஏனெனில் அவள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட சொல்லி தீர்ப்பு வரும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஊரைவிட்டு தள்ளி வைப்பது அவளுக்கு ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. பொதுவாகவே அவள் யாரிடமும் பேசி பழக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.