(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இந்த லிஸ்டுல அதிதி கூட இருக்கிற ரொமான்ஸ் சீனை கடைசியில் தூக்கி வைக்கணும்.   இப்போதைக்கு அதை பத்தி நினைக்க வேண்டாம். அதிதியையும்  அபிதாவையும் மீட் பண்ண வைத்த பின்தான் ரியல் கேம் ஸ்டார்ட் ஆகும்.'  அதிரதன் நினைத்துக் கொண்டான்.

பஞ்சாயத்து கூட்டம்…

காலை பத்து மணிக்கே அந்த கூட்டம் ஆரம்பித்துவிட்டது. தலைவர், உபதலைவர் என்று அனைவரும் வந்திருந்தார்கள். பிராது கொடுத்த அதிரதன் ..  அவன் அருகில் அதிதியும் அங்கு இருந்தனர். எதிரில் அஞ்சலை நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஆதரவாக அங்கு யாரும் இல்லை.

ஏனெனில் அங்கிருந்த அனைவரும் துளசிக்கு நேர்ந்த பரிதாபமான முடிவிற்கு அவள் தான் காரணம் என்று நம்பினர். அவளை ஊரை விட்டு விலக்கி வைக்கும் முடிவுடன் அனைவரும் காத்திருந்தனர். தலைவர் பேச ஆரம்பித்தார்.

"வணக்கம் சொல்லிக்கிறேன். இன்னைக்கு இங்க கூடியிருக்கிற கூட்டம் எதற்காக கூடி இருக்கிறது என்று இங்க இருக்குற அனைவருக்கும் தெரியும். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த ஊரை சேர்ந்த துளசிக்கு ஒரு அவமானம் நேர்ந்தது. அதற்கு காரணம் இந்த ஊரை சேர்ந்த அஞ்சலையோட அம்மாவான கன்னியம்மாதான் என்பதை இந்த கூட்டத்தில் தெரிவிக்கிறோம். மத்தபடி துளசி மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவள் உத்தமமான பெண் என்றும் தெரிவிச்சுக்கறேன்."

தலைவர் நிறுத்த உபதலைவர் தொடர்ந்தார்.

"அதனால துளசிக்கு செய்ய வேண்டிய விட்டுபோன  பூஜை பரிகாரங்களை செய்யணும். அந்த பொண்ணுக்கு ஆதரவா யாரும் அன்னிக்கு பேசாத பாவத்தை அம்மனுக்கு கொடைவிழா நடத்தி சரி செய்யணும். இது பத்தி நாள் தேதியெல்லாம் பிறகு அறிவிப்போம். ஊர் சனங்கள் ஒத்துழைக்கணும்னு கேட்டுகறோம்."

 உப தலைவர் பேசி முடிக்கவும் மீண்டும் தலைவர் தொடர்ந்தார்.

"துளசி விஷயத்தில நடந்த அதே சதி இப்போது அதிதிக்கும்  நடந்து இருக்கு. அதுக்கு காரணம் அஞ்சலைங்றத அதிதியோட கணவர்   நிரூபித்திருக்கிறார். இப்போ அஞ்சலைக்கு  என்ன தண்டனை கொடுக்கணும்னு முடிவு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.