(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

செய்யணும்"

அவர் சொல்லவும் ஊர்மக்கள் 'அஞ்சலையை போலீஸ்ல புடிச்சுக் கொடுக்கணும்... அஞ்சலையை ஊரைவிட்டு வெளியே அனுப்புங்க' என்று குரல் கொடுத்தனர்.

"இது விஷயமா அதிதியோட கருத்தையும் கேட்க பஞ்சாயத்து விரும்புது. அதிதி நீ சொல்லுமா"

"என்னோட கருத்து என்னன்னா…  தப்பு செஞ்ச அவங்களுக்கு தண்டனை தந்தே ஆகணும். அந்த தண்டனை அவங்க தன்னோட தப்பை உணர்ந்து திருந்துற மாதிரி இருக்கணும். அதே சமயத்துல அவங்க பக்கத்துல இருக்குற வேற யாரும் அந்த தண்டனையினால பாதிக்கப்படக் கூடாது. ஏன்னா அவங்க யாருக்கும் இந்த குற்றத்தில் பங்கு இல்லை."

அப்போது அஞ்சலையின் கணவர் செல்வா பேச ஆரம்பித்தார்.

' அஞ்சலைக்கு தரும் தண்டனையில் எனக்கு பங்கு வேண்டும். ஏனெனில் அஞ்சலையை சரிவர புரிந்து கொள்ளாமல்... அவள் தவறு செய்வதை கவனிக்காமல் விட்டது என்னுடைய தவறுதான்எனவே எனக்கும் அந்த குற்றத்தில் பங்கு உண்டு"

"சரி செல்வா நீங்க சொல்றது சரிதான். ஆனால் அதிதி என்ன சொல்ல வர்றான்னா…  இதனால் உங்களுடைய குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று நினைக்கிறாள்"

"ஏய் நீ யாரடி குறுக்க வந்து பேசிகிட்டு இருக்க நான் பண்ண தப்ப பஞ்சாயத்துல ஒத்துக்கிட்டேன். எனக்கு என்ன தண்டனை தரலாம்கிறது பஞ்சாயத்தை முடிவு பண்ணட்டும் நீ பேச வேண்டாம்" என்று அஞ்சலி கத்தினாள்.

'இருமாபஞ்சாயத்திற்கு முன்னாடி  பேசிகிட்டு இருக்கேஇங்க நீ வாய தொறக்க கூடாது. உனக்கு என்ன தண்டனை அப்படிங்கிறது பஞ்சாயத்து முடிவு பண்ணிடுச்சு. உன் வீட்டுல நீ மட்டும் இந்த ஊர் சனங்களோடு பேசக்கூடாது.. பழகக்கூடாது... தனியாதான் இருக்கனும். ஆனால் இந்த கட்டுப்பாடு உன் குழந்தைகளுக்கும் உன் புருஷனுக்கும் கிடையாது"

"ஐயா நான் ஒன்னு  சொல்லிக்க விரும்பறேன். பாரம்பரியமான வீட்டில் அவங்க பொண்ணு வாழ முடியலன்னுதான் எங்க பாட்டி எங்க அம்மாவுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.