(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தண்டனை  அந்த பொண்ணுக்கு மனசுல காயத்தை ஏற்படுத்தக்கூடாதுனு  நினைக்குது. அந்த குழந்தைங்க மனசுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அதனால தாங்கிக்க முடியாது."

"அது உண்மைதான் ஐயாஎனக்கு அப்பா அம்மா ஆதரவு இல்லாம தனியா இருந்த கொடுமை  தெரியும். அது வளர்ற குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாதுஒரு குழந்தை நிம்மதியான  சூழ்நிலையில வாழனும்"

"சரிமா நீ சொன்ன மாதிரி யோசிச்சு ஒரு முடிவை எடுக்கலாம். நாளைக்கு காலைல பஞ்சாயத்துக்கு வந்துரு. அப்ப நம்ம பேசிக்கலாம்." என்றவர் கங்காதரனிடம் திரும்பி..

" சரிங்க..  நான் இப்பக் கிளம்பறேன் காலையில பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு தலைவர் கிளம்பினார்.

"மாமா உங்களுக்கு என் மேல வருத்தம் இல்லையே" அதிதி மெல்ல வினவினாள்.

"இல்லமா உன் மனசுல இருக்குற நியாயத்தை புரிஞ்சுகிட்டேன். நம்ம நாளைக்கு என்ன தீர்ப்பு வருதுன்னு பார்க்கலாம்.இப்போ சாப்டுட்டு தூங்க போகலாம். இரவு ரொம்ப நேரம் ஆயிடுச்சுமா" கை சொடுக்கி கொட்டாவி விட்டார்.

இரவு உணவு முடித்து அவரும் உறங்கச் சென்ற பின்பு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"நான் உங்கள்ட்ட எப்படி நடந்துகிட்டேன்இப்பயாவது சொல்லுங்க."

"நீ எப்படித்தான் நடந்து கொள்ளல சொல்லு. என்னை டென்ஷன் பண்றது உனக்கு வேலையா போச்சு. நாளைக்கு நாம பேசுவோம். இப்ப எனக்கு வேலை இருக்கு நீ போய் தூங்கு"

"ஏன் இவ்வளவு கோபிச்சுக்கறீங்க. சித்தி விஷயத்துல நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கல அப்படித்தானே? இப்ப நான் என்ன செய்யணும்?"

"ஆங்உங்க சித்தியை தூக்கிட்டு போய் சிரச்சேதம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை.   போம்மா போயி அதை செய்."

அவள் முகம் மாறி போனதை பார்த்து அவனே தொடர்ந்தான்.

"அவங்க பண்ண தப்புக்கு ஒரு குடும்பமே கலைஞ்சு போச்சு. அவனவன் பண்ணாத தப்புக்காக வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.