(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சொந்த வீட்டில வாழ முடியல என்கிற வருத்தம் அவங்களுக்கு. அது தான் கோபமாக மாறி துளசியை அவமானப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி இருக்கும்" தலைவர் விளக்கினார்.

"சொத்து கிடைக்கலைன்னா தாத்தாகிட்ட நேரடியாக பேசி சமாதானம் பண்ணி அவங்க கிட்ட இருந்து  உரிமையா கேட்டு வாங்கி இருக்கணும். அதை விட்டுட்டு அம்மாவை அவமானப்படுத்த நினைச்சது எந்த விதத்தில் நியாயம்?"

"நியாயம் அநியாயம் எல்லாம் இதுல பார்க்க வேண்டாம். விஷயம் அதுக்கு மேல போயிடுச்சு.உங்க பாட்டியாலதான் உங்க குடும்பமே அழிஞ்சு போச்சு. இதுதான் உண்மை. அம்மா செஞ்ச  தப்ப பொண்ணும்  பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க. இப்ப நம்ம என்ன செய்யலாம்?"

"ஐயா.. ஒரு விஷயம் சொல்லிக்க விரும்பறேன். பாட்டியால  என்னோட குடும்ப அழியல. எங்க அப்பா எங்க அம்மா மேல சந்தேகப்பட்டதனாலதான்  குடும்பம் அழிந்தது. ஒரு உறவுக்கு இடையில அன்பு இல்லாட்டியும் நம்பிக்கை என்கிறது இருக்கனும்அது எங்க அப்பாவுக்கு எங்க அம்மா மேல இல்லஅதுதான் எங்களுடைய வாழ்க்கை தோற்றுப் போனதற்கு காரணம். மத்தபடி பாட்டியோட சதி என்றெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்"

"சரிதான் வேர் உறுதியா இருந்தா எந்த புயல் அடித்தாலும் மரம் கீழே விழாமல் உறுதியாக நிற்கும். நான் இப்ப பேச வந்தது உன்னோட வாழ்க்கையை பத்திநேத்து மட்டும் நாங்க வரலைன்னா உனக்கும் அதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் புரியுதா?"

"கண்டிப்பா அப்படி நடந்திருக்காதுஎனக்கு என் கணவரை பற்றி தெரியும். என்ன நடந்தது என தெளிவாக விசாரித்து உண்மையை கண்டுபிடிச்சிருப்பார். அவருக்கு என் மேல நம்பிக்கை உண்டு."

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த தலைவர்,

"ஆமா…  கடைசியில அப்படித்தான் நடந்தது. உன் பிரச்சினையை மட்டும் இல்லாம உங்க அம்மா சிக்கலையும் தீர்த்து வைத்து விட்டாரே மாப்பிள்ளை"

அதிதியின் உதட்டில் புன்முறுவல் தவழ்ந்தது. அதிரதனை நோக்கி   பெருமையான பார்வை பார்த்தாள். அவளுக்கு தன் மீது எவ்வளவு நம்பிக்கை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.