(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

என்ன செய்திருப்பான் என்ற யோசனையில் குழம்பிப்போய் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் கண்களில் சிவப்புடன் அதே சோபாவில் அமர்ந்து இருந்த அவளை பார்த்ததும் அதிரதனுக்இஉ சிரிப்பாக வந்தது.

'இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே இரு. என்னை எவ்வளவு டார்ச்சர் செய்தாய். அன்னிக்கு ராத்திரி அப்படி நடந்துக்கிட்டாயே.. கைக்குக் கிடைத்ததை எல்லாம் என் மேல விட்டெறிந்து ரகளை விட்டாயே. கோர்ட்டுல டைவர்ஸ் கேட்டு என்ன பேச்சு பேசுன.. '

என்று எண்ணியவன் அவளை அப்படியே கடந்து போக மனம் இல்லாதவன் போல் தயங்கி நின்று அவள் அருகில் சென்று,

" இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு அதையும் சொல்லட்டா" என்று கேலியாக கேட்டான்.

திடீரென்று அவனுடைய குரலைக் கேட்ட அதிதி துள்ளி எழுந்தாள். அவனுடைய முகத்தை ஒரு நொடி பார்த்தவள் படக்கென்று திரும்பி சமையலறைக்குள் சென்று விட்டாள்.

" நான் காபி போட்டு வருகிறேன்" என்ற குரல் மட்டும் கேட்டது

'அப்படி வா வழிக்கு இனிமே என்னை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ண மாட்ட இல்ல. நான் என்னோட வேலைகளும் முடிச்சுட்டு உன்கிட்ட வந்து பேசுகிறேன்' என்று அதிரதன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.

குளிக்கும்போது அன்றைய அஜண்டாவை திட்டமிட்டான்.

'முதல்ல பஞ்சாயத்தை அட்டென்ட் பண்ண வேண்டும். அங்கு சித்திக்கு என்ன தீர்ப்பு தராங்க பாத்துக்கணும். அதுக்கப்புறம் க்ருபா அங்கிள பாக்குறதுக்கு அப்பாவோட போகணும். போயிட்டு சீக்கிரமா திரும்பி வந்து வினயை மீட் பண்ணனும். அவன் கிட்ட இருக்குற குறிப்புகளை வாங்கி டிஸ்கஸ் பண்ணி செயல்முறை திட்டத்தை தயாரிக்கணும்.'

'அத்தனையையும் இன்னிக்கே முடித்து விடுவோமா' என்ற கவலையும் அவனுக்கு வந்தது.

'அத்தனையும்  முக்கியமான விஷயம். அதனால கரெக்ட் டயத்துக்கு அந்தந்த இடத்துல கவனம் சிதறாமல் எல்லாத்தையும் ப்ளான் பண்ணனும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.