(Reading time: 21 - 41 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

என்னை காப்பாற்றுங்கள்" என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

இப்படி அடுத்தடுத்த விஷயங்கள் பல நடந்து சத்யாவை குடும்பத்துடன் அவருடைய தாத்தா ஊரான கீழமழையூருக்கு அனுப்பி வைத்தது.

'பிதாவேஎன் உள்ளத்தில்  விசாரங்கள் பெருகுகையில் உம்முடைய ஆறுதல் என் ஆத்மாவை தேற்றுகிறது.

உம்முடைய எல்லா இரக்கங்களுக்கும்,எங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உன் அன்பிற்கும் கவனிப்பிற்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

என்றும் எம்மை ஆசிர்வதிப்பீராக.

ஆமென்.'

நெற்றியில் சிலுவை குறியிட்டு ஜெபத்தை முடித்தார் டாக்டர்.ஷீலா மேத்யூஸ். அவர் அருகில் கண்ணை மூடி முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவள் "ஆமென்..." என்று கூறியவாறே திரும்பி அவரை கட்டிபிடித்து முத்தமிட்டாள்.

"லவ் யூ மா"

"ஓஹ் ரேச்சல்பிரேயரை கவனமாக செய்யணும். கர்த்தருடைய ஆசிர்வாதத்திற்காக உண்மையா சொல்வணும்விளையாட்டு பிள்ளைபோல இருக்க கூடாது." மகளை கடிந்து கொண்டார்.

"ஓகேமா.. ஆனால் எனக்கு நீங்க இருக்கீங்களே..  அது போதும்"

"அதற்கும் இறைவனின் ஆசிர்வாதம் வேண்டும் ரேச்சல்." என்றவர் தரையில் கையூன்றி எழுந்தார்.

பேசியவாறே ஜன்னலின்  ஊடே பார்வையை செலுத்தியவர்,

"என்னது பக்கத்து வீட்டில் ஆள் நடமாட்டம் அதிகமாக  இருக்கிறது"

"ஊரிலிருந்து உறவுக்காரங்க வந்திருக்காங்களாம். மேரிம்மா சொன்னாங்க"

"ஊர் கதை பேசக்கூடாது ரேச்சல்." மகளை கடிந்து கொண்டாலும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள     வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தார்.

தொடரும்

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.