தப்பிவிட்டாய். உயிருக்கு ஆபத்தான அடி எதுவும் படவில்லை." கடினமான குரலில் தொடர்ந்து...
"ஆனால் அங்கு சுற்றியிருந்த அனைவருமே உன்னுடைய கதை முடிந்து விட்டது என்றுதான் நினைத்தார்கள். அந்த பதட்டத்தில்தான் மீராவிற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது."
" ஆமாம் தாத்தா, அந்த காட்சியை கண் கொண்டு அவள் பார்த்த போதுதான் அவளும் சுயநினைவு இழந்து விட்டாள். அதன் பிறகு அவள் தன்னுடைய நிலைக்கு வரவில்லை. அந்த விபத்தின் அதிர்ச்சியிலேயே பிரமை பிடித்தது போல இருந்தாள்."
"விநாச காலே விபரீத புத்தின்னு சொல்லுவாங்களே… அதத்தான் நீ செஞ்ச. ஆனா அதோட மோசமான பலன் மீராவுக்கு போயிடுச்சு. சுத்தமா பிரமை பிடித்ததுபோல உட்கார்ந்த இடத்திலேயே உறைந்து போனாள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது தெரியாமல் கண்களில் கண்ணீர் மட்டும் வந்து கொண்டு இருந்தது. அதுக்கு அப்புறமும் அவளுக்கு எவ்வளவு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் கூட அவள் சரியாகவில்லை"
"தாத்தா மீரா நம்முடனேயே இருந்து இருந்தால் அவளை நான் கண்ணுக்குள் வைத்து பத்திரமாக பார்த்து இருப்பேன். ஆனால் என்னுடைய கெட்ட நேரம் அவளுடைய பெற்றோர் வந்து அவனை அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டார்கள். ஏற்கனவே எனக்கு மீராவுக்கும் பிரச்சினை இருந்தது என்று அவர்கள் நினைத்துக் கொண்டு அவளை என்னிடமிருந்து பிரித்து சென்றுவிட்டார்கள். அதுதான் அவள் என்னைவிட்டு ஒரேடியாக பிரிந்து செல்லவும் வழி வகுத்து விட்டது"
"நாம ஒரு தப்பு பண்ணுனா அது பல தப்புக்கு அடிப்படையாக அமைந்து விடும். அந்த சமயத்துல எங்களால் அவர்களை எதிர்த்து பேச முடியலை. ஏன்னா அவங்களுக்கு நாம் மீராவை நல்லா கவனிச்சுவோங்குற நம்பிக்கை போயிருச்சு. 'முக்கியமா மீரா எதுக்கு விவாகரத்து கேட்டாள். அப்போ உங்ககிட்ட அவ சந்தோசமா இல்ல… அவளை நீங்க நல்லா வைச்சுக்கலை' என்று சொல்லி அவளை அழைத்து சென்றுவிட்டனர். அங்கேயாவது அவளே பத்திரமா பார்த்து இருந்திருக்கலாம். அதையும் செய்யலை. ஒரு மோசமான நாளில் அவள் அங்கே இருந்து வெளிய போய்ட்டாள். சுயநினைவு இல்லாத ஒரு பெண்ணை நாம தேடிட்டு இருக்கோம்…"
"தாத்தா… இடையில இந்த போலீஸ் வேற நாம கொடுத்த கம்ப்ளெய்ண்ட் வெச்சு. ஒரு பஸ் ஆக்சிடென்டில் அடையாளம் காண முடியாமல் இறந்து போனவர்களில் உங்க வீட்டு பொண்ணும் ஒருத்தி என்று சொல்லி முடிச்சுட்டாங்க. ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. மீரா என்னைக்காவது என்னை தேடி வருவாள என்று நான் நம்பிகிட்டு