(Reading time: 21 - 41 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இருக்கேன்."

" நான் சாகுறதுக்குள்ள அவள் வருவாள்." என்ற தாத்தா தொடர்ந்து...

" அவள் ரொம்பவும் நல்ல பெண் இங்கே எல்லாரிடமும் அவள் பிரியமாக இருந்ததும் எனக்கு தெரியும். ஏதோ ஒரு சிறு விலக்கம் அது பெரியதாகி விட்டது. எல்லாம் சரியாகும் வரை நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும்"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நந்தினியின்  ஓடி வந்தாள். அவள் கையில் மனு குட்டி,

" அண்ணா இங்கே பாருங்கள்உங்கள் பெண் செய்வதை பாருங்கள்" என்று சொன்னபடியே அவளை தரையில் இறக்கி விட்டாள.

 மனு குட்டி சோபாவின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தது. அவனை பார்த்து சிரித்துக்கொண்டே ஒவ்வோரு சோபாவாக கடந்து  'ஸ்கொயர் கட்' அடித்து அவன் அருகில் வந்து நின்று சிரித்தது.  '..வாயே.." என்று ராகம் வேறு பாடியது.

"மனு குட்டி  நடக்க ஆரம்பிச்சிட்டாள்.. பார்த்தீங்களாண்ணா…  இனிமே  ஓடுவா.. அவளை துரத்தி விட்டு நான் ஓடணும்" என்று குதூகலித்த தங்கையை புன்னகையுடன் பார்த்தபடி,

" அருமையான தங்கை எனக்கு கிடைத்திருக்கிறாள். அவளை எப்படி எல்லாம் கவனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய்!" என்று அவன் கீழே  கால் அருகில் நின்ற மனுவை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான்.

" இந்த மாதிரி உன்னை பார்க்கும்போது ரொம்பவும் அழகாக இருப்பது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. உன்னுடைய குழந்தையிடம் நீ உன்னுடைய நேரத்தை அதிக அளவில் செலவழிக்க முயற்சி செய் "என்றார் தாத்தா.

அப்போது வாசலில் ஒரு கார் வந்தது. அதிலிருந்து மீராவின் பெற்றோர்கள் இறங்கினர். கூடவே மீராவின் தங்கையும் வந்தாள். வரும்பொழுதே முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தவர்களை பார்க்கவே தாத்தாவிற்கு வெறுப்பாக இருந்தது. இப்பொழுது தான் இந்த சத்யாவை ஒரு மாதிரி பேசி சமாளித்து உட்கார வைத்தால்…  திரும்பவும் மூட் அவுட் பண்ண வந்துட்டாங்க...

"மாப்பிள்ளை நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டுக்கொண்டே மீராவின் அப்பா உள்ளே வந்தார். அவர் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. உண்மையான சோகமா இல்லை அவனை அவனுக்காக வரவழைத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

"நீங்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டதாக சங்கத்தில் சொன்னார்கள். அதுதான் உங்கள் உடல்நிலை தேறி விட்டதா என்று விசாரித்து செல்லலாம் என்று வந்தேன்" என்றார்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.