(Reading time: 21 - 41 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"ஒருவிதத்தில் சரிதான். தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும் என்பது விதி. ஆனால் இங்கே நாம் தொலைக்கவில்லை இழந்திருக்கிறோம். மீண்டும் நம் கைக்கு வருமா என்று தெரியாத ஒரு விஷயம்... அதை திரும்பத் திரும்ப அவனுக்கு நினைவுபடுத்துவதில் உங்களுக்கு எப்படி ஒரு நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்அவரே தொடர்ந்து,

"குறைந்தபட்சம் அவன் மனதில் இருக்கும் காயமாவது  ஆற வேண்டாமா. அது ஆறுவதற்கு எஏதாவது செய்தீர்களாநான் என்ன சொல்ல வரேன்னா... இப்போ சத்யாவை இருக்கிற சூழ்நிலையை மாற்ற வேண்டும்இந்த வீட்டில் இருந்தால் அவனுக்கு மீராவின் நினைவுகள் வந்து கொண்டுதான் இருக்கும்நெருப்பை கடப்பது வேறுநெருப்பின் மீதே அமர்வது வேறுஅதனால் நான் என்ன சொல்றேன் அவனை என் வீட்டுக்கு அனுப்புங்க. அவன் மட்டும்  வந்தாலும் சரியா இருக்காது. எனவே எல்லாரும் அங்க வந்து ஒரு மாசம் ரெண்டு மாசம் இல்ல அவ மனசு சரியாகும்வரை அங்கு தங்கி இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

"மாமா உங்களோட வீடு ரொம்ப நல்லா இருக்கும் . அதுவும் மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது. அதனால குளுகுளுன்னு ஒரு இனிமையான சூழல் இருக்கும். அது மனசுக்கு தெம்பு தரும். ஆனால் அவன் தன்னுடைய அலுவல்களை பார்க்கிறதுக்காக இங்கே வந்தாகணும். ரஞ்சனுக்கும் இங்கேதான் வேலை இருக்கு. நாங்க எல்லாருமே சேர்ந்துதான் எங்களோட கன்ஸ்டிரக்ஷன் பிஸினஸை பார்த்துகிட்டு இருக்கோம்அங்கு இருந்து நாங்க அதெல்லாம் சரியா பாக்க முடியாது" என்று மகேஸ்வரன் சொன்னார்

"அது ஒரு பெரிய விஷயமா மாப்பிள்ளை. கார் எடுத்தீங்கனா ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடலாம். காலையில் கிளம்பி வந்துருங்க. வேலையை முடிச்சுட்டு சாயங்காலம் போங்க. நீங்க மூணு பேரும் வரணும்னு அவசியம் இல்லை. ஒரு நாள் நீங்க வந்து பாருங்க. ஒரு நாள் ரஞ்சனும் சத்யனும் வந்து பார்க்கட்டும். அப்படியே கொஞ்ச நாள்  சமாளிச்சுதானே ஆகணும். இந்த சூழ்நிலை மாத்துனாதான் நம்ம குடும்பமே இதிலிருந்து வெளிவர முடியும். மீராவுடன் நினைப்பிலிருந்து முதல்ல நாம வெளிய வரனும்" என்று உறுதியாக சொன்னார்.

அப்பொழுது ரஞ்சன் குறிக்கிட்டு  மகேஸ்வரனிடம்,

" மாமாதாத்தா செல்வது போல் நாம் செய்யலாம் வாருங்கள். நாம் இருவரும் திட்டமிடலாம். திட்டமிட்டு விட்டு அவர் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கலாம். எனக்கும் அது நல்ல வழியாகத்தான் தோன்றுகிறது." என்றான்.

"தாத்தா நாங்கள் எங்களுடைய வொர்க் ஷெட்யூலை  டிசைன் பண்ணிட்டு…  இதுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.