(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அவளுக்கு எது விருப்பமோ… எது நல்லதோ அதை செய்வான்.

மறுநாள் காலையில் கண்  விழிக்கும் போதே சோம்பலாக சத்யன்  உணர்ந்தான். ஏனெனில் அன்றைக்கு அவனுக்கு என்று வேலை எதுவும் கிடையாது. வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டார்கள். அவன் செல்லவில்லை. தலையில் அடிபட்டு கட்டு போட்டிருப்பது ஒரு காரணம் என்றாலும், அவன் நன்றாக இருந்தாலும் அந்த திருமணத்திற்கு சென்றிருக்க மாட்டான். மீராவை பற்றி துக்கம்       விசாரிப்பார்கள்அவள் உயிருடன் இருப்பதாக நம்புபவனுக்கு அந்த சூழலில் இருக்க பிடிக்காது.

அவர்கள் திருமணம் முடிந்து வர மாலை ஆகிவிடும். காலை டிபன் மட்டும் அவனுக்கு தயாராக இருக்கும். மதிய சாப்பாடு அவனுக்கு வெளியிலிருந்து வரவழைப்பதாக ரஞ்சன் சொல்லிச் சென்றிருக்கிறான்தாத்தாவிற்கு தெரிந்தவரிடம் சொல்லி இருக்கிறார். அவனுக்கு சாப்பாடு வரும் என்று சொல்லி விட்டு சென்றார்கள்.

எனவே  அவ்வளவு அவசரமாக எழுந்து குளித்து கிளம்பிசென்று செய்ய  அவனுக்கு ஒரு வேலையுமில்லை. வீட்டிலும் யாரும் இல்லை என்கிற நிம்மதியில் எழுந்து சென்று பீரோவைத் திறந்து மீராவின் படத்தை எடுத்தான்திரும்பவும் படுக்கையில் படுத்துக்கொண்டான். மீராவின் படத்தை பக்கத்தில் இருந்த டீப்பாய் மீது வைத்துவிட்டு அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாளனன்அவனுக்கும் மீராவுக்கும் இடையிலான நாட்கள் அவனுடைய மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.

சத்யன் மீராவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டான். அவன்தான் அவளை விரும்பி விரும்பி திருமணம் செயது கொண்டான். மீராவிற்கும் விருப்பம்தான் என்று நினைத்தான்.

எப்போது அவர்களுடைய காதல் ஆரம்பித்தது….? .  இருவரும் ஒரே ஊரில் வசித்து வந்தாலும் சந்தித்து கொண்டதில்லை. இருவருடைய வாழ்க்கை தரமும் வேறு வேறு

மீரா கோவில்… பூங்காஉள்ளூர் ஆற்றங்கரைஎன்று பொழுதை கழிக்கசத்யன் ஷாப்பிங் மால்வெளிநாட்டு பயணம்கார் ரேஸ் என்று பொழுதை கழித்தான்.

கல்லூரிக்கு மீரா பேருந்தில் பயணித்த பொழுது அவன் ரோல்ஸ்ராய் காரில் பயணித்தான்.

மீரா கையில் சர்டிஃபிகேட்களுடன் வேலை தேடி இண்டர்வியூவில் கலந்து கொள்ளும்போது அவன் அப்பாவுடைய கம்பெனியில் பொறுப்பேற்றான்.

இறைவன் போட்ட முடிச்சு எனில் எப்போதாவது சந்தித்தாக வேண்டுமே…

அவனுடைய கம்பெனிக்கு புராஜெக்ட் தருவதற்காக ஒரு  வடமாநில குழு விஸிட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.