(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அவளுடைய மனதில் தாழ்வு மனப்பான்மை வரக் கூடாது என்றெண்ணி அவளுக்கு தனியாக புடவை தொழில் ஆரம்பித்து தந்தான்.  மீராவின் பெயரிலேயே அந்த வகை புடவைகளும்ட்ரஸ் மெட்டீரியல்ஸும் பிரசித்தி பெற்றன. அவளும் தொழில் அதிபர் ஆகி விட்டாள்.

அவளுக்கு இனிமையான குரலும் உண்டு. பெரும்பாலும் இரவுகளில் மெல்லிய குரலில் பாடுவாள். பாடிக்கொண்டே தூங்கியும் விடுவாள்.

"என்ன பழக்கம் இது?. உனக்கு நீயே தாலாட்டு பாடிக் கொள்கிறாய்நீ உறங்கியபின் எனக்கு உறக்கம் வர மாட்டேன் என்கிறது.."

"முன்பெல்லாம் நான் தனித்து இருக்கும்போது உறக்கம் வராதுரொம்பவும் லோன்லியா இருப்பேன். அதனால இப்படி பழகிட்டேன்"

"ஏன் உன் வீட்டில் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்கிறாய்?. உன் தங்கை கூட எல்லோரிடமும் நன்றாக பழகுகிறாள்."

"எனக்கு கண்டிப்பு அதிகம். யாருடனும் பேச அனுமதி கிடையாதுஅதனாலேயே சரியாக பேச வராது."

"பேச்சு குறைவாக இருந்தால் கிரியேட்டிவிட்டி அதிகம் இருக்கும்நீ அப்படித்தான்உன் கை ரொம்பவும் அழகாக பேசுகிறது.."

"தேங்க்ஸ்"

" ஆவ்ரொம்ப ட்ரமாடிக்கா இருக்கும்மா!. நமக்குள்ள  தேங்கஸ் சொல்ல கூடாது. இப்ப எனக்காக ஒரு பாட்டு பாடு. உனக்கு பிடிச்சது.. பாடு"

அவள் பாடினாள்…. 'இறுதிவரை துணை இருப்பேன் என்றது நீதானே' என்ற வரிகள் வரும்போது கண்கள் அவனை வேண்டுதலாக பார்த்தன.

"யெஸ்ப்ராமிஸ்.. கடைசிவரை உனக்கு துணையாக இருப்பேன்" என்று அவளை இறுக்கி பிடித்து அணைத்து சொன்னான்.

அவன் பழைய நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டு மானசீகமாக மீராவிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

"மீராநீதான் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லைஎன்னை தனியே விட்டு விட்டு சென்று விட்டாய். நடு பாதியில் நான் நிற்கிறேன். ப்ளீஸ் கீப் யுவர் ப்ராமிஸ்சீக்கிரமாக என்னிடம் வந்து விடு" அவன் மீராவிடம் பேசிக் கொண்டிருந்தான். காலை உணவு வேளை தவறியதையும் அவன்  அறியவில்லை.

ரேச்சல் காலையில் எழுந்ததில் இருந்தே பக்கத்து வீட்டை வேவு பார்த்துக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.