(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

கொண்டார் அவர்.

"நான் போய் தூங்குறேன்மா! நானா எழுந்துக்கிற வரைக்கும் யாரும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க!" உரக்க கூறிவிட்டு எழுந்துச் சென்றார் அவர். என்னத்தான் ஆயிற்று அவருக்கு? எப்போதும் இதுப்போல் ஒரு நாளும் அவர் நடந்துக் கொண்டதே இல்லையே..! ஏன் இவ்வாறு எல்லாம் செய்கிறார் என்றுத் தவித்துப் போனார் தர்மா. அவரது வைராக்கியங்கள் யாவும், அவரிடத்தில் துளியும் எதிர்படவே இல்லை. அவர் சென்றதினை உணர்ந்தவராய் சமையல் அறையில் இருந்து வெளிவந்தவர், யாரிடமும் ஏதும் பேசாமல் தன் அறை நோக்கிச் சென்றார். பாவம்..! அதுவும் இதயம் தானே, அதுவும் வேதனைக்கு உட்பட்டிருக்கும் அல்லவா! கண்ணீரால் சிவந்த கண்களோடு, சிரம் தாழ்ந்த வண்ணம் தன்னறைக்கு வந்து கதவினை அவர் மூட, சட்டென வாயைப் பொத்தி, அவரை வளைத்தனர் யாரோ!  உறைந்துப் போனவராய், அவர் நிலைத்தடுமாற,

"உஷ்..!உஷ்..! கத்தாதே!" என்று அவர் செவியின் அருகே கிசுகிசுத்தார் இராகவன். அவரிடமிருந்துத் திமிறி விலகியவருக்கு, என்ன நடக்கிறது என்று விளங்குவதற்கே சில நிமிடங்கள் பீடித்தன.

"நீங்க..நீங்க? என்னப் பண்றீங்க? அதுவும் என் ரூம்ல?" தடுமாறியப்படி வினவினார் அவர்.

"என் மனைவியோட ரூமுக்கு நான் வரக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போடுற தைரியம் யாருக்கு இருக்கு?" சர்வ சாதாரணமாய் அவர் கேட்க செய்வதறியாதுத் திகைத்து நின்றார் தர்மா.

"ரொம்ப நாள் கழித்து ஊரிலிருந்து ஒருத்தன் வரானே அவனை வந்து வரவேற்போம்னு இல்லாமல் நீ என்னடான்னா தூணுக்குப் பின்னாடியும், கிட்சனுக்குள்ளேயும் ஔிந்திருக்க?" என்று அவர் கூற, திகைத்துப் போனார் தர்மா. எனில், அனைத்தையும் பார்த்துவிட்டு தான் வேடிக்கைக் காட்டியுள்ளாரா? என்று மலர்ந்தது வாடியிருந்த செந்தாமரை முகம், ஆதவ ஔிப்பட்டதாய்!

"அப்போ எல்லாத்தையும் தெரிந்தே தான் பண்ணீங்களா?" திடீரென மென்மையான குரலில் ஏதோ ஓர் மயக்கத்தினை உணர்ந்துக் கொண்டார் இராகவன்.

"சரி...யாராவது பார்த்தா தப்பா போயிடும்! நான் வெளியே போறேன். நீங்க இங்கேயே கூட தூங்குங்க!" என்று அவர் வெளியேற முயல, அவரை தடுக்கும் வண்ணம் கதவினில் இருக் கரங்களையும் கொண்டு அணையிட்டார் அவர். மீண்டும் குழம்பிப் போய் தர்மா நின்றிருக்க, அவரது கரம் உயர்ந்து தாழினை இட்டது.

 "எ...என்னப் பண்றீங்க? விடுங்க...அத்தை...!" என்று அவர் கத்த, அவரோ எவ்வித பாவனையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.