(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

நான் நடப்பேன், என்று கர்வத்துடன் திரிபவரே..! தன் விருப்பத்திற்கு வாழ்வதெல்லாம் ஓர் வாழ்க்கையா? எப்படி வேண்டுமாயினும் வாழலாம் என்பவரும் இருக்கின்றார், இப்படித்தான் வாழ வேண்டும் என்பவரும் இருக்கின்றார். எப்படிவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம், இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு சிலரால் மட்டுமே இயலும். ஆன்ம நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு பகலில் அனைவர் முன்னிலையிலும் ஒரு வேடமாய், தனிமையில் மற்றொரு வேடம் தரித்து முகமூடி அணிந்தே பலர் வாழ்கின்றோம். அடுத்தவர் வாழ்வைக் குறித்து சிந்திக்காமல் நம் சுகபோகங்களைத் தேடுகின்றோம்! தேகத்தினை அழிக்கும் போதையையும் நாடுவர், உடல் தேவைக்காய் பிஞ்சென்றும் பாராமல் நஞ்சிழைத்தும் சாடுவர், வெளியே நீதியின் புகழ் பாடுவர்! விசித்ர மனிதர்கள்! வையத்தில் தனது இனத்தினைத் தானே அழிக்கும் ஆற்றல் மனிதனிடமே மிகுந்து உள்ளது. பெருமை கொள்வோம், நாமும் மனிதர்கள் தான் அல்லவா! நியாயங்களக்கு வழங்கப்படும் நியாயங்களைக் கண்டு கரம் தட்டி வரவேற்கலாம், இந்த இருப்பத்தொன்றாம் நூற்றாண்டில்!

தொடரும்!

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Nenjil thunivirunthaal story main page

{kunena_discuss:1163}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.