(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

விதியானது விளக்க இயலா திருப்புமுனைகளைத் தன்னகத்தே கொண்டது. இங்கு நிகழ்பவை யாவுமே தான் நிகழ்வதற்கென ஒரு காரணத்தை கொண்டிராமல் இல்லை. ஏற்படும் சூழல்களின் காரணங்கள் மறைக்கப்படும் என்றாலும், இல்லை என்றாலும், அதற்குப்பின் காரணங்கள் இல்லாமல் இல்லை.

மறுநாள் இரவு..!

எத்தீஞ்செயலும் புரிய மாட்டேன், மதுபானம் பருக மாட்டேன், என்று மனையாளுக்கு அளித்த வாக்கினை உடைத்தெறிந்தவராய் தன் இல்லம் அடைந்தார் இராகவன். தள்ளாடியவண்ணம் காரை நிறுத்தியவராய் இறங்கி அவர் வர, கதவானது உட்புறமாய் தாழிட்டு இருந்தது.

"போச்சு! அவ திட்டப்போறா!" அவள் அங்கில்லை என்பதனைக் கூட யோசிக்க இயலாமல் மயக்கநிலையில் இருந்தார் அவர். தள்ளாட்டத்துடன் கதவினைத் தட்டியவர் கண்கள் சுயநினைவிற்காக இறுக மூடித் திறந்தன. ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் கதவானதுத் திறவப்பட, எதிரிலிருக்கும் பிம்பத்தின் அடையாளத்தைக் கூட அவரால் காண இயலவில்லை. அந்நிலையில் இராகவனைக் கண்டதும் இனம்புரியாமல், சூழல் புரியாமல் தவித்துப் போனாள் கௌரி.

"நீ கிளம்பலையா?" அவர் வாய்மொழிந்ததோ எதிர் நிற்பவர் தர்மா என்று எண்ணி, தன்னிலை மறக்க வைக்கும ஒரு அரக்கனின் பிடியில் பீடிக்கப்பட்டிருந்தவரால் அதைத் தான்  செய்ய இயலும். உள்ளே நுழைய தடுமாறியவரைக் கண்டு பதைப்புடன் தாங்கினாள் அவள்.

"பெரியய்யா!" அவரோ அடையாளந் தெரியாமல் புன்னகைப் பூத்தார்.

"ஸாரி! வேற வழியில்லாம தான் குடித்துவிட்டேன். கோபப்படாதே!" என்றவர் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள, தன் மேல் நெருப்பானதுத் தீண்டுவதாய் அவரை தள்ளினாள் கௌரி. அதனால், எப்பயனும் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், தர்மா கோபத்தில் இருக்கிறாள் அவ்வளவுத்தான்!

"ஏ...! ஸாரிடி! இனிமே இப்படி பண்ணமாட்டேன்." என்றவரின் கரம் அவள் கரத்தினை வலுக்கட்டாயமாய் பிடித்தது.

"என்னப் பண்றீங்க? என்னத் தயவு செய்து விடுங்க! யாராவது வாங்களேன்!" அவள் கதறுவதனை செவிமடுக்கவும் இங்கு எவருமில்லை. அது தன் மனைவியல்ல என்பதனைப் புரிந்துக் கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. காலமானதுக் கடக்க கடக்க, ஔி உணரா இருளுக்குள் பலரது வாழ்வானது தள்ளப்பட்டது.

சுயமரியாதை குறித்து சிந்திக்காமல், பேசாமல் எவரும் இருப்பதில்லை. என் விருப்பத்திற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.