(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"அந்த ஆளு, அதான்…  அன்னைக்கு கல்லால் தலையில் அடிச்சோமேஅவன் இன்னைக்கு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டான்"

"யாரு…?  உன்னை ஸ்டுபிட் என்று சொன்னானே... அவன்தானே" என்று அவன் ஒருமுறை உறுதி செய்து கொண்டான்.

"ஐயஅதை ஞாபகம்படுத்தாதடா... நான் சொல்றத மட்டும் கேளு. இன்னிக்கி காலைல என்ன ஆச்சுன்னா…  அதுக்கு முன்னாடி நேத்து என்ன ஆச்சுன்னு சொல்றேன். நான் மழையில் நனைந்து விட்டு வந்தேனா…" என்று ஆரம்பித்து நேற்று நடந்ததை அவனிடம் விவரித்தாள்.

"ரெண்டு பேரும் சேர்ந்து உன்னை வெறுப்பேத்தி இருக்காங்க. இப்படித்தான் என்னோட கணக்கு டீச்சரும் என்னை வெறுப்பேத்தும்…  என்னோட பரிட்சை பேப்பரை குடுக்குறதுக்கு முன்னாடி அந்த வரதன் இருக்கான்லஅதான் நூற்றுக்கு நூறு வாங்குவான்ல...  அவனுடைய பேப்பரை குடுத்துட்டு அடுத்தாப்புல என்னை கூப்பிட்டு நாலு மார்க் வாங்கி இருக்கே... அப்படின்னு சொல்லும். க்ளாஸ்ல எல்லாரும் சிரிப்பாங்க. எனக்கு கோவமா வரும்"

"ஆமாண்டாநானும் கோவமாகதான் இருந்தேன். அப்புறம் என்ன ஆச்சுனாஅந்த கல்பி பின்னாடியே இன்னோரு எருமை சுத்துமேகருப்பு ஸ்வெட்டர் போட்டிருக்குமே… "

"ஆங்மாரப்பன்போன வாரம்கூட எங்க ஹாஸ்டல்ல மரம் வெட்டினாங்க.."

"கரெக்ட்அந்த ஆளு வந்து தலைவர் தாத்தாட்ட ஒரே ரகளை…" என்று அந்த 'வழக்குரை காதையை' சொன்னாள்.

"அந்த ஆளு ஏன் உன்ன கூப்பிட்டுச்சு?"

"என்னவோ தெரியலை. அவனை நினைச்சாலே தேறா மன்னா என்கிற வரிதான் நினைவிற்கு வருது."

"ஆங்அது எங்க ஸ்கூல் ட்ராமா போட்டாங்கல்ல அப்போ  நான் பார்த்திருக்கேன். அது கண்ணகி என்கிறவங்க கதைதானே. அந்த கண்ணகியா தலைமுடிய விரிச்சு போட்டுகிட்டு  எங்க கனகு அண்ணாதான் நடிச்சான்அவன் ராத்திரியெல்லாம் உட்கார்ந்து தேரா மன்னா…  தேரா மன்னா..னு ஒப்பிச்சுக்கிட்டே  இருந்தான். அப்படின்னா என்னனு எனக்கு புரியல. கனகு அண்ணாட்ட கேட்டேன் அவனுக்கும் புரியல. ஆனா ட்ராமால கத்தி...  கத்தி.. பெருசா பெருசா வசனம் எல்லாம் ரொம்ப நல்லா பேசினான். எல்லோரும் கை தட்டினாங்க" என்று எடி தன்னுடைய நினைவலையை பகிர்ந்தான்.

"தேரா மன்னா அப்படினாஆராய்ந்து முடிவெடுத்து தெளியாத மன்னானு அர்த்தம். அந்த பூக்காரன் ஒரு பதட்டத்துல என்னை துணைக்கு கூப்பிட்டு விட்டான். ஒரு யோசனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.