(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

சரி… நமக்குதான் அவனை பிடிக்கலையேஅவனுக்கும்தான் என்னை பிடிக்கலைஇதனால  உலகம் ஒண்ணும் அழிஞ்சு போயிடாது

"பாப்பாஅந்த பையனுக்கு பொண்டாட்டினா உசுராம்…"

"ம்…" அசுவராசியமாக கேட்டாள்.

"அந்த பொண்ணு…"

"டைவர்ஸ் வாங்கிட்டு இந்த அன்பு பண்பும் நிறைந்த கண்அவனாகிய கணவனை விட்டுட்டு போயிடுச்சு…" அவள் முடித்தாள்.

"இல்லவிவாகரத்து பண்ணலையாம். அந்த பொண்ணு தன்னை விட்டு போயிடக்கூடாதுன்னு இவரே போய் லாரிக்கு முன்னாடி விழுந்திட்டாராம்.."

அடப்பாவி… தற்கொலைங்கறது கோழைத்தனம்அதிலும் அதை ஒரு ஆயுதமாக்கி மிரட்டுவது முட்டாள்தனத்தின் உச்ச கட்டம்அதைப்போய் பெருமையாக சொல்லிக்கறாங்களே

"அத்தோட அந்த விவாகரத்து பேச்சு நின்னு போச்சாம். அந்த பொண்ணு இப்ப அவர் கூட இல்லைனாலும்வேறு ஒரு பொண்ணை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாராம்அத்தனை ஒழுக்கம்…'

டூ டவுட்ஸ் யுவர் ஆனர்… அம்புட்டு பிரியமானஏக பத்தினி விரதனை விட்டுட்டு அவனுடைய தர்ம பத்தினி ஏன் போனாளாம்…? அப்புறம்...

ஒரு பெண்ணை மிரட்டி பணிய வைப்பதை.. -அதுவும் இளகிய மனம் கொண்ட அப்பாவி பெண்ணைஎப்படி நியாயம் என்று சொல்ல முடியும்? அது எமோஷனல் ப்ளாக்மெயில் அல்லவா

அலுத்துக் கொண்டு அவள் கேட்டாள்.

"இதுல என்ன பெருமை இருக்கு மேரிம்மா.. அவர் நல்ல கணவராக இருந்திருந்தால் அந்த பெண் ஏன் விவாகரத்து கேட்க போறாங்க?"

"அது என்னனு எனக்கு தெரியாது.. அதுக்கு ஏதாவது காத்து கறுப்பு பிடிச்சு இருக்கும்"

ஆஹாங்… தனக்கு ஏற்ற மாதிரி பேசிக்கறாங்கப்பா… 'நல்ல' புருஷன்கிட்டேருந்து டைவர்ஸ் கேட்ட அந்த பொண்ணுக்கு பேய் பிடிச்சதுன்னா.. லாரியில் போய் விழுந்தவனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குனு சொல்லலாமே

"மேரிம்மா… "

"கண்ணுநீ என்ன நினைச்சாலும் சரிஅந்த பையனை மாட்டி விட்டது தப்பு.. ஒவ்வொரு ஆம்பிளையும் இருக்காங்களேபொண்டாட்டி கிட்ட இருந்து எப்படி கழண்டுக்கலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.