(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

பொருட்கள்… ப்ச்அவ்வளவு ஏன்ஹோட்டலில் சாப்பிட ஆர்டர் சொல்லும்போதுகூட அவன்தான் சாய்ஸ் செய்வான்.

அவனையும் குறை சொல்ல முடியாது.. என்ன வேண்டும் என்று அவன் கேட்கும்போது எல்லாம் உங்கள் விருப்பம்தான் என்று சொல்லி விடுவாள். அவன் எது வாங்கி தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வாள். அதனால் அவளுடைய சுய விருப்பங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை

ஆனால்...

அவளுக்கு ஒரு ஆபத்து என்றால் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது… என்பது வரை அவளுக்கு தெரிந்து இருக்கிறது.

சே… என்ன மென்டாலிட்டிஅவளால் அவனிடம் உண்மையாக இருக்க முடியவில்லைமறைத்து வாழ வைத்திருக்கிறான். அன்பின் பெயரால் அவளை சிறை வைத்திருந்திருக்கிறான்...

அவளுடைய முடிவை எண்ணி அழுதிருப்பாளோ… மனுவை நினைத்து ஊமையாக கதறி இருப்பாளோஉள்ளுக்குள் வைத்து புலம்பி... புழுங்கிஅதுதான் அவளுக்கு அவன் தந்த பரிசா?

தாத்தா சொல்லுவாரே…. ஒரே ஒரு வாழ்க்கைஅது எப்படியாவது முடியதான் போகிறதுஅதை பிசிறில்லாமல்…  யார் மனதிலும் குறை வைக்காமல்…. முடிக்க வேண்டும்…! பிரியமானவர்களுக்கு அழகான பிரியாவிடை தந்துஅவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை பொக்கிஷம் போல மாற்றி...சிரித்தபடி போக வேண்டாமா…? அது அவளுக்கு புரியாமல் போய் விட்டதே...

அவன் ஒரு மகாராஜா போல நடந்து கொண்டிருக்கிறானோ…?. அவனை அவள் எழுதி வைத்திருப்பது போலஅவனும் அவளை காவியமாக எழுதி இருக்க வேண்டாமாஅவர்களுக்கிடையில் ஒரு வழிபோக்காகவே அன்பு இருந்திருக்கிறது.

அவள் தந்தவற்றை அவன் வாங்கி கொள்ள…  கடன்காரனாக நிறுத்தி சென்று விட்டாள்.. ப்ச்திருப்பிகூட அவள் எதையும் கேட்கவில்லை…  அப்போ…  அது கடன் இல்லை அவள் போட்ட பிச்சை

அவன் வேதனை தாளாமல் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான்.

அப்போது அங்கு ரேச்சல் வந்தாள். அவன் தலையை பிடித்தபடி அமர்ந்திருப்பதை பார்க்கவும் கோபம் வருந்தமாகி விட்டது.

அச்சோ அவன் ரொம்ப ஃபீல் பண்றான் போல…

அவன் அருகில் சென்று செருமினாள். அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.