(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஷீலாவின் வலி வேதனை கண்ணில் தெரிய… ரேச்சல் அனைத்தையும் மறந்து போனாள். ஓடிப் போய் கட்டி கொண்டாள்.

'சாப்பிட்டுதான் மாத்திரை போட்டேன். கொஞ்சம் தூங்கினால் தானாக  சரியாகி விடும்"

"டாக்டர் மாதிரி பேசுங்கம்மாதானாக எப்படி சரியாகும்ம்தூங்கிடாதீங்க இதோ வந்திடறேன்"

அவள் வேகமாக சமையலறைக்கு சென்றாள். அங்கிருந்த பொருட்களை வைத்து அவள் கசாயம் தயாரிப்பதை பார்த்த மேரி அதிசயித்தார்..

சூடாக கசாயம் தயாராகவும் அதை ஒரு க்ளாஸில் ஊற்றிக் கொண்டு அம்மாவிடம் வந்தாள்.

"மாஇதை குடிங்கரெண்டு நாளாக மழை பெய்ததில் உங்களுக்கு ப்ராபளம் ஆயிருக்கும்" என்று நீட்டினாள்.

அதை குடிக்கும்போதே ஒரு சுறுசுறுப்பு உருவாவதை உணர்ந்தார்… கொஞ்சம் தலைவலி குறைவதை கண்டார்.

ரேச்சல் இதை எப்படி செய்தாள்.?

அவருக்கு தெரிந்து ரேச்சல் காபிகூட போட மாட்டாள்… அதிலும் கசாயம் தயாரிப்பது டூ மச்மேத்யூஸின் அம்மா  உயிருடன் இருந்தவரை இப்படித்தான் எதையாவது செய்து தருவார்ஷீலா ஆங்கில மருத்துவர் ஆதலால் கை மருந்து…  கசாயம் என்று விரும்ப மாட்டார்.

அவர் ரேச்சலை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தார்.

"மாஇப்ப ஓகேயா?"

"ஹாங்ஓகே டியர்இந்த மாதிரி கசாயம் எல்லாம் உன்னோட பாட்டிதான் செய்வார். உனக்கெப்படி தெரியும்?"

"பாட்டிகிட்ட இருந்து கத்துட்டு இருந்திருப்பேன். இல்லயூ ட்யூப்ல பார்த்திருப்பேன். அன்னிக்கு நந்தினி அம்மாகூட இதை செஞ்சாங்க.." அடுக்கடுக்காக பதில் சொன்னபோதுதான் நினைவு வந்தது

அய்யோ… அந்த ஆன்ட்டிதான் அம்மாகிட்ட என்னவோ சொன்னாங்களேஅவங்க மறந்து போனாலும் அவளே நினைவு படுத்தி விட்டாளே.. திரு திருவென முழித்தாள்.

"ஆன்ட்டியாஆங்விஜயா மேடம்தானேஅவங்க காலைல நடந்த விஷயத்தை சொன்னாங்க…"

மீண்டும் சத்யன்பிரதாபமா…!

ஆவ்… அவளுடைய இந்த நாள் மட்டும் நெட்வொர்க் பிரச்சினையில் மாட்டிக்கொண்ட லிங்க்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.