(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அடுத்தவகூட எப்படி சேர்ந்துக்கலாம்னு… ஹும்...கண்ணுக்கு மறைஞ்சா மனசுக்கும் மறைஞ்சிடும்ஆனாசத்யன் தம்பி அப்படி இல்லை."

இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது.. மேரிம்மாவின் கணவரே வேறு பெண்ணோட போய் சேர்ந்துகிட்டவர்தான்..

"...க்...கேமேரிம்மாஉங்களுக்கு புரியலநான் சொல்வதைவிட அந்த கல்பியே வந்து தாத்தாகிட்ட சொன்னால்தான் இந்த பிரச்சினை தீரும்நான் அந்த கல்பியை பார்த்து பேச போனேன்அவள் இல்லை…'

"அடபோபாப்பாஅவள் காலைலேயே வந்து கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு போயிட்டாளாம். மச்சான்கிட்ட சும்மா பேச்சுக்கு சொன்னதை அவன் இவ்வளவு பெரிசாக்கிட்டானாம். "

அவ்… அவளுடைய சான்ஸ் போயிடுச்சா.. இனி இந்த பாழும் உலகம் அவளை என்ன சொல்ல போகிறதோஇந்த பழியோடு அவள் பக்கத்து வீட்டுக்கு எப்படி செல்ல முடியும்?... இனி  மனுகுட்டியை பார்க்க போக முடியாதா…?

"அது எல்லாம் சரியாயிடுச்சு. அந்த தம்பியோட அம்மாதான் ஷீலாம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க"

ஓ மை காட்… விஷயம் ஐநா சபை வரை போயிடுச்சா..?

"நீ சாப்பிட்ட பிறகு அவங்களை வந்து பார்க்க சொன்னாங்க"

"அம்மா வந்துட்டாங்களா…! "

"அவங்களுக்கு தலைவலின்னு அறையில் படுத்திருக்காங்க. "

தலைவலியுமா… ரேச்சல்! அவ்வளவு பெரிசா நீ என்ன செஞ்சிட்டேஒரு உண்மைய சொன்னதுக்காக இபிகோ செக்ஸன்வழக்கு எண்லாம் சொல்லுவாங்க போலியே

சமாளிப்போம்…!

மெதுவாக எழுந்து ஷீலாவின் அறைக்கு சென்றாள்…

"மா… " குரல் தந்தாள்

"ரேச்சல் வந்துட்டியா…?" ஷீலா முனகினார்.

"மாரொம்ப தலைவலியா...நான் மருந்து தரட்டா…" அருகில் சென்று நெற்றியை தொட்டு பார்த்தாள்

"மாத்திரை போட்டுட்டேன். தைலமும் தடவியாச்சுசரியாகலைஆமா.. நீ எங்கே போயிருந்தாய்?"

"எடியை பார்க்க போனேன்மா..மாஏதாவது சாப்பிட்டீங்களா.."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.