(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

போல வட்ட வட்டமாக ஒரே பாயின்டில் சுத்தி வருதே… சொய்ங்ங்ங்.. சொய்ங்ங்சொய்ங்ங்ங்...!

அவள் அம்மா பேசுவதை கேட்கும் திராணி இல்லாதவள்போல சோகமாக பார்த்தாள்…

"அவங்க உன்னை புகழ்ந்துட்டாங்க…"

"என்னது?' காது மடல்களை கூராக்கினாள்.

"நீ உண்மையை சொன்னதுக்காக பாராட்டினாங்க."

"அவங்க கோபப்படலையா?"

"எதுக்குபக்கத்து வீட்டை சப்போர்ட் பண்றேன்னு நீ கதை விடாமல் நடுநிலையாக பேசினதை புகழ்ந்தாங்க"

என்னங்கடா நடக்குது… ரேச்சலை பாராட்டி இருக்காங்களாஅவங்க சத்யலோகத்துல இருந்து இங்கு நேரா வந்தவங்களோ

"ஆனால் அம்மாசத்யன் சார்(?)... கோபப்பட்டா மாதிரி தோணுச்சு"

"அது கோபமா இருக்காதுபுத்தி கொள்முதலாக இருக்கும். கல்பிகிட்ட அந்த நேரத்துல என்ன பேச்சு? அப்படினு விஜயாவே சொன்னாங்க"

"ஓஹ்அவங்க ரொம்ப நல்லவங்களோ"

"ஷீ ஈஸ் குட்அப்புறம் அந்த பையன்ட்ட வம்பு வேண்டாம். ஒரு சாரி கேட்டுரு"

"நான் ஏன் கேட்கணும்?"

"அந்த தாத்தாவுக்காகஅவர்தான் கோவிச்சுகிட்டாராம்.. ரேச்சலை எதுக்கு சாட்சிக்கு கூப்பிட்டேனு..பேரன் மேல அவ்வளவு பிரியம். நீ சமாதானம் சொன்னால் சத்யன் கூலாகிட்டா நல்லதுதானே… "

அம்மாவிற்காக… எடிக்காகமேரிம்மாவிற்காக.. அப்புறம்மனுகுட்டிக்காகவும் அவள் சத்யனிடம் சமாதானக்கொடி பறக்க விட தீர்மானித்தாள். அவன் எங்கே…?

அவள் தேடிய சத்யன் பசுமை குடிலுள் தனியே அமர்ந்திருந்தான். அவன் கையில் மீராவின் மருத்துவ அறிக்கை இருந்தது. மீண்டும் திருப்பி பார்த்தான்.

அந்த ரிப்போர்ட் மனுகுட்டி பிறந்து ஒரு மாதத்தில் எடுக்கப்பட்டிருந்தது… அவள் பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்தபோது இது நடந்திருக்குமோ

அந்த ரிப்போர்டின்படி மீராவிற்கு மூளையில் புற்று நோய் கட்டி இருப்பதாக வந்திருந்தது. தொடர் தலைவலிக்காக அவளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்கேன் செய்யப்பட்டிருந்தது

ஓ… மீராவிற்கு தலைவலி வந்திருந்ததா…? அவள் அவனிடம் சொல்லவே இல்லையேஅவள் மனுகுட்டியுடன் வீடு திரும்பியபோது சாதாரணமாகவே இருந்தாள். எப்போது ட்ரீட்மெண்டிற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.