(Reading time: 18 - 36 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இப்போதுதான் ஷாப்பிங் என்று ரிலாக்ஸாக வந்துள்ளார். அதனால் அங்கிருக்கும் அசைவ உணவு விடுதிபற்றி தெரியவில்லை. அசைவ உணவு வெளியில் சாப்பிடும்போது தரமானதாகவும் ப்ரெஷ் ஆகவும் இருக்க வேண்டும். எனவேதான் தயங்கினார்.

"மா…  எனக்கு ஒரு கடையை தெரியும். நாம் அங்கு செல்லலாம்"

" சரி ரெஸ்டாரண்ட் பெயர் தெரியுமல்லவா? மேப்பில் பார்த்து பாதையை சொல்கிறாயா?"  என்றார்.

ரேச்சல்  சொல்ல சொல்ல ஷீலா காரை ஓட்டி சென்றார். ஆனால் அவள் ரொம்பவும் மேப்பை பார்க்க வில்லை. ஏற்கனவே தெரிந்த ரூட்போல சொல்லிக் கொண்டு வந்தாள்.

ஏதோ திட்டம் போட்டுதான் கிளம்பி இருக்கிறாள். யாரிடமோ கடையை தெரிந்து கொண்டு சாப்பிடணும் எனறு அடம் பிடித்து வந்திருக்கிறாளோ…. ஷீலா யோசித்தார். நல்லதுதான்…  மேத்யூஸ் இறந்தபின் அவளை வெளியே எங்கும் அழைத்து செல்லவில்லை. அவள் மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான்...

"இதுதான் இடம்இறங்குங்க.. சீக்கிரம்சீக்கிரம்" என்று ரேச்சல் சீட்டிலேயே குதித்தாள்.

காரை விட்டு இறங்கியபின் அவர் கவனித்தார். அது ரெஸ்டாரண்ட் இல்லைஒரு சாதாரண வீடு … 'அப்பாயி அசைவ உணவகம்' என்ற பலகையை பார்த்து தயங்கினார். அவர் மறுக்கும் முன் ரேச்சல் உள்ளே ஓடி விட்டாள். வேறு வழியில்லாமல் அவரும் உள்ளே சென்றார்.

அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவரை அழைத்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்தவர்...

"இந்த இடம் சுமாராக இருக்குதே" அவளிடம் கிசுகிசுத்தார்.

"மாஇங்கே சுத்தமாக தரமாக இருக்கும். சிம்பிளான கடைதான். லேடிஸ் நடத்துறாங்க. செம டேஸ்டா இருக்கும்"

"உனக்கெப்படி தெரியும்."

"முகநூல்ல எங்க கடை பற்றி எழுதியிருக்காங்கம்மாஅதை படிச்சிட்டு நிறைய பேர் வர்றாங்க' என்றார் அங்கு வந்த ஒரு வயதான பெண்மணி.

அவரை பார்த்து சிரித்த ரேச்சல்,

"இவங்கதான் அப்பத்தா…  இந்த கடை ஓனர். ரெஸிபி எல்லாம் இவங்களுடையதுதான். லேடிஸ் மட்டும்தான் இங்க வொர்க் பண்றாங்க."

"ஆமாம்மா அதனால குடும்பமா வர்றவங்க.. பெண்கள் மட்டும் இங்கே சாப்பிடலாம். அசைவ உணவுங்கறதால குடிச்சிட்டு யாராச்சும் வந்துடுவாங்கனு இந்த ஏற்பாடு. மத்தவங்க  தேவைபட்டா பார்சல் வாங்கிக்கலாம்." பாட்டி சொல்ல,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.