(Reading time: 18 - 36 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஹாய் சொல்லி கையை நீட்டினான். அவனிடம்  கை குலுக்கிக் கொண்டே அருகில் இருந்த எடியை அவனுக்கு அறிமுகம் செய்தாள்.

" உனக்கு ஒரு குட்டி பாய்பிரெண்ட் இருக்கிறானாஎன்று சொன்னபடியே  அவளுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தவனுக்கு ஒரு வினோதமான உணர்வு தோன்றியது. அந்த தொடுகை சந்தேகத்தை கிளப்பியது.

'இது ரேச்சலா?' என்று ஒரு சந்தேகமும் அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை  நீண்ட நாட்கள்…  கிட்டதட்ட இரண்டு வருடங்கள்  கழித்து பார்ப்பதால்  அப்படி ஒரு உணர்வு தோன்றி இருக்கும் என்று எண்ணினான்.

உடனே  இயல்பாக மாறி விட்டான்அவர்களிடம் பேசிக்கொண்டே வெளியே வந்தான். காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் போதும் எடியுடன் தான் வளவளவென்று பேசிக் கொண்டு வந்தான். எடியும் திக்கித்திக்கி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே வந்தான். சிரிப்பும் குதூகலமாக அந்த பயணம் முடிந்தது. எடியை அவனுடைய விடுதியில் இறக்கிவிட்டு வீடு திரும்பினார்கள்.

இரவு உணவு முடித்த பின் மெதுவாக கடை பரப்பினான். அவன் அங்கிருந்து   அவர்களுக்காக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தந்தான்ஒரு அழகிய சிறிய வெள்ளி பேழையை எடுத்தான். அதில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்துக் காட்டினான்ஷீலா உள்ளுக்குள் அதிர்ந்து போனார். ஒரு முடிவோடு தான் வந்திருப்பான் போலிருக்கிறதே என்று பயந்தார். ஆனால் ஜெமி அவரிடம் கெஞ்சலாக

"ஆன்ட்டி இது லக்கி ஸ்டோன்ஸ்பெஷலாக என்னிடம் வாங்கி வரச் சொன்னாள். ப்ளீஸ் ஆண்ட்டி அவள் போட்டுக் கொள்ளட்டும். மறுக்காதீர்கள்" என்று கூறினான்.

"ஓகே ஒன்னும் பிரச்சனை இல்லைஅவளுக்கு என்ன பிடித்திருக்குமோ அதை செய்யட்டும். ஆனால் கர்த்தர் மேலே அவளுக்கு நம்பிக்கை இருக்கணும்னுதான் நினைக்கிறேன். அதுதான் முழு விசுவாசமாக இருக்கும்" என்று அவர்  அறிவுரை வழங்கினார்.

"யெஸ் மா.. ஐ டூ…  இதை ஒரு ஜூவல்லரியா போட்டுக்கிறேன்" என்று அவருடைய தோளில் தலையை சாய்த்துக் கொண்டு கொஞ்சினாள்.

" சரி விடு நீ போட்டுக்கொள்ளலாம்."

உடனே  அவள் தன்னுடைய இடது கையில் அதை போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள். உண்மையிலேயே அது மிகவும் அழகாக இருந்தது. "தேங்க் யூ ஜெமி"

"இது மூன்ஸ்டோன் பொதுவா கேர்ள்ஸ் போட்டுக்கலாம். இந்த மோதிரம் உனக்கு மனதைரியத்தை தரும். அப்படின்னு அந்த கடைக்காரர் சொன்னார்" என்று ஜெமி கூற

" ஆனால்  எனக்கு தைரியம் எல்லாம் நிறைய இருக்கு பாருஎன்றவளுக்கு  டக்கென்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.