(Reading time: 18 - 36 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"உங்களுக்கு எதுவும் அம்மாவிடம் சொல்ல வேண்டுமா?" என்று கேட்டாள்.

" நான் நன்றாக இருக்கிறேன். நோ ப்ராபளம்"

"ஏனெனில் நாங்கள் என்று வெளியே செல்கிறோம். வருவதற்கு மதியத்திற்கு மேல் ஆகிவிடும். அதனால்தான் கேட்கிறேன்"

"எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் போய்வாங்க ரேச்சல்"

"நான் எங்கே செல்கிறேன் என்று கேட்கவே இல்லை"

"சொல்லுங்கள்" சிரித்துக்கொண்டே நந்தினி சொன்னாள்அவளிடம் இன்னும் குழந்தைதனம் இருக்கிறதே…  எதையோ சொல்ல விரும்புகிறாள் என்று அவளும் காது கொடுத்துக் கேட்டாள்.

"நாங்க ஏர் போர்ட்டுக்கு போறோம்" என்று ஆரம்பித்து மீண்டும் அனைத்தையும் சொல்லி கிளம்பினாள.

அதன் பிறகு காரில் ஏறிய ஷீலாவும் மூவரும் விமானநிலையத்திற்கு முன்கூட்டியே சென்று விட்டனர்.

ஜெமி வர வேண்டிய விமானம் வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.  அதற்கு பிறகும் அவன் அனைத்து சோதனைகளை முடித்து வெளியே வர மொத்தம் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்ஷீலாவிற்கு சற்று கவலையாக இருந்தது. அவ்வளவு நேரம் எப்படி இங்கு காத்திருப்பது என்று நினைத்தார். ஆனால் ரேச்சலுக்கு அந்தக் கவலை இல்லை. எடியுடன்  சேர்ந்து கொண்டு அந்த இடத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

கேபிடேரியா பகுதிக்கு சென்று எடிக்கும் அவளுக்கும் தேவையான ஸ்நாக்ஸ்களை வாங்கி கொண்டு சாப்பிட்டாள். திரும்பவும் வந்து விசிட்டர்ஸ் இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்சற்று நேரம் அமைதியாக அதனை  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் எழுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் அருகே சென்று அதன் வழியாக அங்கிருந்து கிளம்பும் விமானங்கள் வந்திறங்கும் விமானங்களை வேடிக்கை பார்த்தனர்.

சரியான நேரத்திற்கு ஜெமியின் விமானம் வந்து இறங்கியது. அவன் கிளியரன்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு வெளியே வர மேலும் ஒரு மணி நேரம் ஆகியது. அவன் பேசஞ்சர்ஸ் ஏரியா வழியாக வெளியே வரும்பொழுது கையை ஆட்டி ஷீலாவும் ரேச்சலும் வரவேற்றனர். அவன் நேராக ஷீலாவிடம் வந்து 'ஆன்ட்டி' என்று அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

'ஹொவ் ஆர் யு ஆன்ட்டி' என்று அவன் கேட்டுக் கொண்டே ரேச்சலை  தேடினான். அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.