பொம்மை போல … தும்பை பூ போல மென்மையாக… லகுவாக இருந்தவளுக்குள் இப்படி ஒரு ஆவேசம் எப்படி வந்தது. பட்டாம் பூச்சி பெண்ணிற்குள் சிங்கத்தின் சீற்றம் எப்படி வந்தது…?. யோசித்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடத்தில் போலீஸ் ஜீப் வந்து அவர்களை கொண்டு சென்றது அவர்களுடன் கேசவனும் சென்றுவிட ரஞ்சனும் சத்யனும் கிளம்பினார்கள்.
"நாமும் அவங்ககூட போயிருக்கணுமோ?" சத்யன் வினவ,
"வேண்டாம்… கேசவ் பரத்தை விசாரிக்க நாம் குறுக்கே நிற்பதுபோல ஆகிவிடும். லெட் ஹிம் டூ தட்" என்று ரஞ்சன் பதிலளித்தான்.
இருள் கவிழ ஆரம்பித்த மாலை வேளையில் ரேச்சல் வந்து நின்ற கோலம் ஷீலாவை பதற வைத்தது…
"என்னடி ஆச்சு?"
"ஒண்ணுமில்லைமா" மகளின் பதில் திருப்தி தரவில்லை.
"என்ன ஒண்ணுமில்ல" என்று குரல் உயரும்போது….
"டாக்டரம்மா… " என்று அழைத்த கல்பியை பார்த்து நிதானித்தார்.
"அவங்களை ஒண்ணும் சொல்லாதீங்க… என் வாழ்க்கைய காத்த சாமி… " என்று ஆரம்பித்து நடந்தவற்றை விவரித்தாள்.
"ரேச்சல் அவ்வளவு தைரியசாலியா…?' என்று ஷீலா அதிசயித்தார்.
"என்னமோ.. போ… கேட்க சந்தோஷமாக இருக்கு. என் மகள் தைரியமாக போராடி இருக்கிறாள்… " பெருமைபட்டார்.
"ஆமாம்… நான் நன்றி சொல்லிட்டு போகலாம்னுதான்.வந்தேன்" நன்றி சொல்லிய கல்பி கிளம்பி சென்றாள்.
"எப்படி ரேச்சல் அதை செய்தாய்?"
"எனக்கு எதுவும் நினைவில் இல்லைம்மா… கல்பிய துரத்தி வர்றத பார்க்கவும் கோபம் வந்தது. அடிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் எதுவும் நினைவில்லைமா.."
"எதுவானால் என்ன?. நல்ல விஷயம் செய்திருக்கிறாய் ரேச்சல். குளிச்சிட்டு வா… உனக்கு பிடித்த பைனாப்பிள் கேகரி செய்து வைக்கிறேன்." என்று முத்தமிட்டு அனுப்பினார்.
வீட்டிற்குள் சென்ற சத்யன்… குளித்து முடித்து உடை மாற்றி தன்னுடைய அறையில் நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பை திறந்தான். அப்பாவும் ரஞ்சனும் அவனுடன் அமர... முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய அலுவலக வேலைகளை முடித்தான். இருள் சூழ ஆரம்பித்த நேரத்தில்...