(Reading time: 25 - 50 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"----"

"ப்ளீஸ்… நீங்கள் ஒரு டாக்டர்… நான் ரொம்பவும் விளக்கி சொல்லத் தேவையில்லை.." மறுமுனை மௌனம் சில நொடிகள் நீடித்தது. .

"ஓகே… நான் மேரிம்மாவை அனுப்பறேன். அவங்ககிட்ட தந்து விடுங்க. மனுவை தூங்க செய்து தர சொல்றேன்."

"ரொம்ப… ரொம்ப தேங்கஸ் மேடம்" சத்யன் நன்றி கூறினான்.

அவன் வீட்டிற்குள்ளே திரும்ப செல்லவும்,

"என்ன ரேச்சல் தூங்கலையா.. நான் பாப்பாவை தூக்கிக் கொண்டு செல்லவா?" என்று கேட்க,

"இல்லை அம்மா அவர்கள் மேரிம்மாவை அனுப்புகிறார்கள். நீங்கள் மனுவை அவர்களிடம் தந்து விடுவீர்களாம்" என்றான்.

அவன் சொல்வதைக் கேட்கவும் மனுவை கையில் வைத்துக் கொண்டு விஜயா வாசலை பார்த்தார்.அங்கு சரியாக மேரியும் உள்ளே வர... குழந்தையை நீட்டிய விஜயா,

" பாப்பா தூங்கவும் கொண்டு வந்து கொடுத்து விடுமா" என்று சொன்னார்.

"பாப்பா சாப்பிடலைன்னா அதோட சாப்பாடை கொடுத்து விட சொன்னாங்க. அவங்க ஊட்டி விட்டு தூங்க பண்ணி அனுப்புறாங்களாம்" என்று மேரி சொல்லவும் கிண்ணத்தில் பால் சோறிட்டு தந்தார்.

மேரியிடம் செல்ல மறுத்து மனு பெருங்குரல் எழுப்ப… "ரேச்சல் வந்திட்டியா" என்று மேரி குரல் தர… மனு ஆர்வமாக வெளியே பார்த்தாள். அவளுக்கு விளையாட்டு காட்டியபடியே மேரி ரேச்சலின் வீட்டிற்குள் சென்று விட்டார்.

மனுவை பார்க்கவும் ஓடி வந்து கட்டிக் கொண்ட ரேச்சல் அழுகை முத்தமிட… மனு அதற்கு பதிலாக எச்சில் முத்தங்களை பொழிந்தது… அவளை தூக்கி மேஜையில் அமர வைத்த ரேச்சல் விளையாட்டு கதை பேசி கொஞ்சினாள். மனுவின் அழுகை மறைந்து சிரிப்பொலி நிறைந்தது.

பக்கத்து வீட்டில் கேட்ட குழந்தையின் சிரிப்பொலி சத்யனை அமைதிபடுத்தியது. அவனுக்கு புரிந்தது… மனுகுட்டி ரேச்சலிடம் செட் ஆகி விட்டாள்… இனி அழுகை நின்று உறங்க ஆரம்பித்து விடுவாள்… நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். அப்போது….

'காஷ அய்ஸா ஹோ தேரே கட்மன் ஸே சுன் கி மன்ஜில் சலே…'

என்று இந்தியில் பாடும் குரல் கேட்டது… ஆன்தி படப்பாடல்…! ம்...ரேச்சல்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.