(Reading time: 25 - 50 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஒருவன் கல்பியை நெருங்கியது தெரியவும் காட்டாபெல்ட்டிலிருந்து கல்லை அவன் நெற்றியை குறி பார்த்து அடித்தாள்.அவன் அலறியபடி கீழே விழவும். துரத்தி வந்தவர்களின் கவனம் அவள் பக்கம் திரும்பியது.

சட்டென மரக்கிளையில் இருந்து குதித்தாள். இவன்களுக்கு காட்டாபெல்ட் அடி போதாது. சுற்றிலும் பார்வையால் அலசினாள். முட்கள் நிறைந்த 'கேக்டஸ்' செடி அவளுடைய கண்ணில் பட்டது. அவள் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து செடியை தொடாமல் அதன் அடிபகுதியில் பரபரவென சுற்றினாள். அப்படியே சுண்டி இழுத்தாள்… சூப்பர்… ஒரு ஆயுதம் தயாராகி விட்டது. கல்பி அவளை நெருங்கவும்,

"கல்பி… குனிஞ்சுக்கோ…"என்று கத்தினாள். அவள் சொல்லுக்கு கட்டுபட்ட கல்பி சட்டென தரையில் மண்டியிட, ரேச்சலின் கையிலிருந்த கேக்டஸ் சுழல ஆரம்பித்தது… அது சுழன்ற வேகத்தில் கல்பியை துரத்தி வந்த முரடன்கள் மீது கூராக பாய ஆரம்பித்தது. சில முட்கள் முகத்தை கிழித்தன… சில குத்தின… சில உரசி சிராய்க்க… சில உடலில் மெல்லிய ஈட்டிபோல பாய்ந்து குத்தி வலியை ஏற்படுத்தின… இருவரை அடித்து துவைத்துக் கொண்டே…

"விடாத கல்பி… அந்த மரக்கட்டையை எடுத்து அவனை அடி" என்று மூன்றாமவனை சுட்டிகாட்டி கத்தினாள். சட்டென புது இரத்தம் பாய்ந்ததுபோல உணர்ந்த கல்பி கட்டை எடுத்து விளாச ஆரம்பித்தாள். மூன்று பேரும் மரண அடி வாங்கி சுருண்டபோது… முதலில் ரேச்சலிடம் கல்லடி வாங்கியவன் ஓடி வந்தான்.

"என்னாங்கடி… வித்தை காட்டறீங்களா.." என்று கத்தியபடி ஓடி வந்தவன் முகத்தை பார்க்கவும் ரேச்சலுக்கு ஆவேசம் வந்து விட்டது. ஒரு மாயைக்குள் தன்னை மறந்து ஆழ்ந்து போனாள். அது அவளை ஒரு அதிபயங்கரமான கனவிற்குள் கொண்டு சென்றது. அதில். அவன் அதர்மம் விளைவிக்கும் அரக்கனாகவும் அவள் அவனை அழிக்க வந்த மரண தேவதையாகவும் மாறி போக...

"பாவீ…" என்று ஆங்கார கூச்சலிட்டாள்.

அவனை வதம் செய்யும் நோக்கில் கையிலிருந்த கேக்டஸ் ஆயுதத்தை சுழற்றினாள்.. அச்சோ… அதை அவன் தன்னுடைய ஜெர்கின்னால் பிடித்து கொண்டான். கல்பி பதறி பின்வாங்க… அவன் வெறி மிகுந்த பார்வையுடன் அவளை நெருங்கினான்.

தரையை விட்டு இரண்டடி தாவி குதித்த ரேச்சல் அவன் முழங்காலை பார்த்து ஓங்கி ஒரு உதை விட்டாள். பலமான உதை…. அவனுடைய குதிரை எலும்பில் பட்டது… அம்மாடியோ என்று அவன் சரிய… கல்பியிடமிருந்த கட்டையை பிடுங்கி சரமாரியாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.