(Reading time: 25 - 50 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"அப்புறம் எப்படி அது மீரா இல்லைனு சத்யன் சொல்றான்."

"அந்த பாடிய எரிச்சப்போ முழங்கால் எலும்பில் ப்ளேட்ஸ் இருந்ததை எடுத்து தந்தாங்க. மீராவிற்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்பட்டதில்லை. அங்கேதான் சந்தேகம் ஆரம்பித்தது…"

"ஓகே… நீங்க இதை போலீஸ்ல சொன்னீங்களா?"

"சொன்னோம்… ஆனால் மீராவின் அப்பா அவளுக்கு இரண்டு வருஷத்திற்கு முன்னாடி காலில் ப்ளேட் வச்சிருந்ததா சொல்லிட்டார்"

"ஓ… அது உண்மைதானே…"

"அவருடைய வார்த்தைமீது எனக்கு நம்பிக்கையில்லை…"

"அது ஏன்னா… அவரோட இரண்டாவது பெண்ணை இவனுக்கு கல்யாணம் செய்து தர்றேன்னு பிடிவாதமாக இருக்கார். அப்புறம் எங்களுக்கு மேலும் சில விஷயங்கள் கிடைத்திருக்கின்றன…" என்ற ரஞ்சன் சௌம்யா சொன்னதை தெரிவித்தான்.

"அடாப்டட் டாட்டர்… சொத்து வேற இருக்கு… யோசிக்க வேண்டிய விஷயம்தான். இந்த கேஸை திரும்ப இன்வெஸ்டிகேஸனுக்கு கொண்டு வரனும். அப்பதான் சட்டப்படி இவங்களை விசாரிக்க முடியும். பட்… வேற வழியில உடனடியாக பரத்தை பிடிக்க முயற்சிக்கறேன். நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்திடுங்க"

"எந்த போலீஸ் ஸ்டேஷன்…?"

"லோக்கல் ஸ்டேஷன்ல புதுசா கம்ப்ளைன்ட பதிவு செய்யனும். அப்புறம் பஸ் விபத்தை விசாரிச்ச ஸ்டேஷனுக்கு போகலாம்."

"இப்ப ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னனு கம்ப்ளைன்ட் பண்றது?"

"நான் இருக்கேன்ல… நைட்க்குள்ள பரத்தை கண்டுபிடிச்சு உள்ளே தள்ளி விசாரிச்சுடறேன். அப்புறம் மீராவோட அப்பாவை உள்ளே இழுக்கலாம்…" கேசவன் விளக்கினான்.

"மை காட்… சரியான நேரத்தில் நீ வந்திருக்கே… ரொம்ப தேங்க்ஸ் கேசவ்…" நன்றி சொன்னவன்…

"வீட்டுக்கு வாயேன். அம்மா உன்னை பார்த்தால் சந்தோஷப்படுவாங்க."

"அது…"

"இப்பவே கிளம்பு…" என்று கேசவனை அழைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

தன்னுடைய சைக்கிளில் மலைப் பாதையில் மெதுவாக ஓட்டி வந்த ரேச்சல் வழக்கமாக அவள் எடியுடன் இருக்கும் மரத்தின் அருகில் வந்தாள். அவளுக்கு பொழுது போகவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.