“சொல்றேன் pbs... பசிக்குது... குக் செய்தீயா என்ன?”
“ஐயோ... சாரி மனோஜ்... எனக்கு மட்டும்னு நான் ஒன்னும் செய்யலை... நூடுல்ஸ் சாப்பிட்டு முடிச்சிடலாம்னு நினைச்சேன்...”
“எனக்கு மட்டும் வண்டி வண்டியா அட்வைஸ் சொல்லு... ப்ச்... இட்ஸ் ஓகே... கிளம்பு வா... நாம வெளியே சாப்பிடலாம்...”
“ஃபைவ் மினிட்ஸ் கொடுங்க... வந்திடுறேன்...”
ஐந்தே நிமிடத்தில் அவசர அவசரமாக கிளம்பி வந்தாள் மஞ்சு...
“சொன்ன மாதிரி அஞ்சு நிமிஷத்துல வந்துட்டீயே pbs ... அரை மணி நேரம் ஆகும்னு நினைச்சேன்...”
“பசிக்குதுன்னு சொன்னீங்களேன்னு வந்தேன்... வாங்க வாங்க கிளம்பலாம்... நானா உங்க கிட்ட நிறைய கேட்கனும்...”
இருவரும் அருகே இருந்த இந்திய ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு சென்று சாப்பிட்டார்களோ இல்லையோ, பேசினார்கள்... குறிப்பாக மனோஜ் நிறையவே பேசினான்.. மஞ்சு அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்...!!!
இருவரும் அங்கிருந்து கிளம்பிய போது அசோக் அவனின் மனைவியுடன் இவர்களின் எதிரில் வந்தான்...
“மஞ்சு நீ என்ன இங்கே?”
“ஹாய் அசோக்... இவர் தான் என் ஹஸ்பன்ட் மனோஜ்... மனோஜ், இவர் அசோக், என் ப்ராஜக்ட்ல இருக்கார்...”