(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

அம்மாக்கும், மனைவிக்கும் சரியா ஒத்துப் போகாததால முத்துக்குமார் இந்த பங்களாவை கட்டிட்டு மனைவியோட தனியா பத்து மாசத்துக்கு முன் இங்கே வந்துட்டதா சொன்னார்."

  

"ஓகே! இவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா?"

  

"குழந்தைங்க இல்லை, சார். அவங்க இரண்டு பேர் மட்டும் தான். தினமும் காலைல பதினோரு மணி மாதிரி வேலைக்கு ஒரு லேடி வருவாங்களாம்."

  

"ஓகே! சரி வாங்க க்ரைம் சீன் பார்ப்போம்!" என அபினவை உடன் அழைத்துக் கொண்டு நடந்தான் தென்றல்வாணன்.

  

வீட்டின் வெளியே இருந்த படிகளில் அமர்ந்து சத்தமாக அழுதுக் கொண்டிருந்தவனை கவனித்து விட்டு, அபினவை கேள்வியாக பார்த்தான் தேன்.

  

"இது தான் சார், முத்துகுமார்!" என அவனிடம் சொன்னான் அபினவ்.

  

க்ளிக்!

  

முத்துகுமாரின் முகம் தென்றல்வாணனின் மூளையில் பதிந்தது!

  

முத்துக் குமாரின் அருகில் இன்னும் மூவர் இருந்தனர்!

  

க்ளிக்!

  

அவர்களின் முகங்களும் அவனின் மூளையில் பதிந்தது!

  

"ஓகே, லெட் அஸ் ப்ரோசீட்," என அபினவிடம் சொல்லி விட்டு தொடர்ந்து நடந்தான்.

  

************

  

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.