(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

  

"ஓகே... உங்க மேரேஜ் அரேஞ்ட் மேரேஜா இல்லை லவ் மேரேஜா?"

  

"லவ் மேரேஜ் இன்ஸ்பெக்டர்."

  

"உங்க பேரெண்ட்ஸ் உங்க காதலை ஏத்துக்கிட்டாங்களா?"

  

"என்னோட அம்மா அப்பாக்கு என் சந்தோஷத்தை தவிர வேறெதுவும் முக்கியமில்லை. எனக்கும் அதே போல அவங்க ரொம்ப முக்கியம்"

  

"ஓகே... உங்க வைப்புக்கும் உங்களுக்கும் நடுவில ரிலேஷன்ஷிப் எப்படி இருந்துச்சு?"

  

"ப்ளீஸ் இன்ஸ்பெக்டர், இப்படி எதையாவது கேட்டு என்னை ஹர்ட் செய்யாதீங்க அவ என் உயிர். நாங்க இரண்டு பேரும் சண்டையே போட்டதில்லை. நீங்க வீட்டுக்குள்ளே வந்து திருடிட்டு இந்துவையும் என் கிட்ட இருந்து பிரிச்சவங்களை கண்டுப்பிடிக்க முயற்சி செய்ங்க. டைமை வேஸ்ட் செய்யாதீங்க!"

  

"அது ஜஸ்ட் ஃபார்மாலிட்டிக்கான கேள்வி. எங்களால முடிஞ்ச அளவு எல்லாம் செய்றோம் முத்துக்குமார். உங்க மனைவியை கொலை செய்தவங்களை சீக்கிரமே கண்டுப்பிடிச்சிடுவோம். எங்களை நீங்க நம்பலாம்.”

  

“யாரை நம்பி என்ன ஆகப் போகுது இன்ஸ்பெக்டர்? என் இந்து எப்படியும் திரும்ப என் கிட்ட வரப் போறது கிடையாது!”

  

“உங்க வருத்தம் எனக்குப் புரியுது முத்துக்குமார். நான் உங்க கிட்ட பொறுமையா பேசுறேன். உங்க மொபைல் போனை மட்டும் கொடுத்துட்டு போங்க. அப்புறமா எந்தெந்த பொருள் காணாமல் போயிருக்குன்னு ஒரு லிஸ்ட்டும் கொடுக்க வேண்டி இருக்கும்."

  

"இந்தாங்க என் போன். நீங்க கேட்ட லிஸ்ட் தரேன் இன்ஸ்பெக்டர், பட் கொஞ்சம் டைம் கொடுங்க." என சொல்லி, தன் மொபைலை எந்த தயக்கமும் இல்லாமல் நீட்டினான்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.