(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

என்ன??? நீங்க இபப்டி செய்யும் போது எனக்கு தான் கில்டியா இருக்கு... நான் உங்களை ரொம்ப தொந்தரவு செய்றேன்னு தோணுது...”

  

செல்லமாக மெதுவாக, மிக மிக மென்மையாக அவளின் தலயில் கொட்டிய மனோஜ்,

  

“நீ என்னை தொந்தரவு செய்றீயா??? என்ன பேசுற pbs?? இது நம்மக் குழந்தை pbs...  நீ குழந்தையை வயித்துல சுமக்குற, நான் உங்க இரண்டுப் பேரையும் என் மனசுல சுமக்குறேன்...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மஞ்சு சத்தமாக சிரிக்க, மனோஜ் பேச்சை நிறுத்தினான்...

  

“சாரி மனோஜ், வேணும்னு சிரிக்கலை... உங்க சினிமா டையலாக் கேட்டு சிரிப்பு வந்திருச்சு... இந்த டையலாக் எல்லாம் உங்களுக்கு செட் ஆகலை...”

  

மனோஜ் கோபப் படவில்லை... அதற்கு பதிலாக மஞ்சுவின் தலையை அன்புடன் வருடினான்...

  

“நான் டையலாக் பேசலை மஞ்சு... உண்மையா உணர்ந்துப் பேசுறேன்... உன்னை பார்த்ததும் பிடிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டேன், சந்தோஷமா பார்த்துக்கனும்னு நினைச்சேன்... அதெல்லாம் உண்மை தான்... ஆனால் கல்யாணம்னு ஒன்னு நடந்தப்புறம் எவ்வளவு நடந்திருச்சு... எனக்காக நீ எவ்வளவோ செய்திருக்க, ரொம்பவே அட்ஜஸ்ட் செய்திருக்க... அதும் கொஞ்சம் மாசம் முன்னாடி நான் நடந்துக்கிட்ட விதம்... என் தப்பை உணர்ந்து நான் பேசினப்போ நீ சொன்னப் பாரு ‘உங்களை வெறுத்திருவேனோன்னு நினைச்சேன்’ன்னு ஒரு வார்த்தை... அது என்னை ரொம்ப இம்பாக்ட் செய்திருச்சு pbs... எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு எனக்குப் புரிய வச்சது அது தான்... எனக்கு கரியர்ல ஒரு ப்ராப்ளம், யார் மேலேயாவது கோபம்னா நான் அதை உன் கிட்ட காட்டுறது என்ன நியாயம்... ஒரு நல்ல ஹஸ்பண்டா நான் இல்லைன்னு தானே அர்த்தம்???”

  

மனோஜ் பேச்சை நிறுத்தி மஞ்சுவை பார்க்க, அவளும் அவனையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்... பின்,

  

“ஹாங்... எதுக்கு இந்த ப்ரேக்??? நான் நீங்க நல்ல ஹஸ்பன்ட் தான்னு சொல்லவா?? சாரி மிஸ்டர் முசுட்டு மேனேஜர்... இந்த தடவை அதுக்கு வாய்ப்பே இல்லை... நீங்க ஃபெயில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.