(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வழக்கமான் டெஸ்ட், ஸ்கான் என்று டாக்டர் சொன்னதுமே மனோஜ் லீவ் எடுத்துக் கொண்டு மஞ்சுவை அழைத்துச் சென்றான்.

  

அதன் ரிசல்ட்ஸ வந்தப் போது, அதன் படி மஞ்சுவிற்கு இரும்பு சத்து குறைவாக இருக்கிறது, சக்கரை கலந்த உணவுகளை குரைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் டாக்டர் சொன்னப்போது மஞ்சு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை...

  

ஆனால் அது மனோஜின் மனதை கொஞ்சமாக நெருடியது...

  

கீரை சேர்த்துக் கொள், ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடாதே என்றுத் தொடங்கி பல மாதிரியான அறிவுரைகளை நிர்மலா ஒருப்பக்கம், பத்மா ஒருப்பக்கம், போதாதென்று எக்ஸ்ட்ராவாக வினோதினி ஒருப்பக்கம் வாரி வழங்க, மஞ்சு ஈசியாக தலையை ஆட்டி அதை எல்லாம் கேட்டுக் கொண்டாள்...

  

ஆனால் மனோஜால் அதை அப்படி ஈசியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை...

  

இது போல எந்த உணவுகளை சேர்க்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாதே... பெரியவர்கள் பக்கத்தில் மஞ்சு இருந்திருந்தால் அது அவளுக்கு நல்லதாக இருந்திருக்குமோ என்ற கேள்வி புதிதாக அவனுள் முளைத்தது!

      

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.