(Reading time: 12 - 24 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

அவள் கையைப் பற்றி, தன் உதட்டில் வைத்தான் மாதவன்.பிறகு " ஐ ஆம் சாரி, மானசி, இத்தனை குழைந்தைகளுக்கும் நீ தனியா வந்து எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய், என்னை நீ மன்னித்திருக்கக் கூடாது மானசி"

  

" ஏய்…. எந்து பரையறது,( என்ன சொல்றீங்க) நாயரே, அதெல்லாம் முடிந்து போன விஷயம். இதுக்குப் போய் அழலாமா? இந்த வலியெல்லாம் கொஞ்ச நேரம், பிறகு குழந்தையை பார்த்த பிறகு, இந்த வலியெல்லாம் மறந்து போயிடும், நாயரே." என்றாள் சிரித்துக் கொண்டே.

  

அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு, அவனும் சிரித்துக் கொண்டே தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

  

அங்கே குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தனர் நர்சும், கூடவே டாக்டரும் வந்தார்.

  

அவர்கள், அவள் அம்மாவிடம் கொடுத்தபோது, "இவ்விட, குட்டியோட அச்சனிடத்தில் கொடுத்தோ( இங்க, குகந்தையின் அப்பாவிடத்தில் கொடு) " என்றாள், மானசா.

  

 மாதவனுக்கு பெருமையாகவும், குழந்தையை கையில் வாங்கியதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது அவனுக்கு.

  

ஐந்து குழந்தைகள் பிறந்திருந்தாலும், முதல் முதலாக, இந்தக் குழந்தையைத்தான் பிறந்தவுடன் தன் கையில் வாங்கிக் கொள்கிறான் அவன். அவன் மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான் குழந்தையோடு.

  

" இதோ நிண்ட அம்மையை நோக்கு, அம்மு குட்டியோட அம்மையை நோக்கு குட்டி" என்று சந்தோஷத்தோடு அவன் கூறவும், அவன் கையை தடவி கொடுத்து, அவன் சந்தோஷத்தோடு அவளும் சேர்ந்துக் கொண்டாள்.

  

அவர்கள் இருவருக்குமே,  அதுதான் முதல் முறையாக,பிறந்த குழந்தையுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பது. " தாங்க்ஸ் மானசா!"

2 comments

  • இந்த கதையை எழுத்தாளர் எப்படி சுபமாக முடிக்க போறாங்கனு காத்திட்டு இருக்கேன்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.